மதுரை:மதுரை மாநகராட்சியின் வடக்கு மண்டலத்தில், குடிநீரின்றி திண்டாடி வரும் மக்கள் அவல நிலையை போக்க, அதிகாரிகள் முன்வரவில்லை.
மழை இல்லாததால், மாநகராட்சியின் குடிநீர் தேவை, கேள்விக்குறியாகியுள்ளது. வைகை அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத நிலையில், அடுத்த மூன்று மாதங்களுக்கு மட்டுமே மதுரைக்கு ஓரளவு குடிநீர் கிடைக்கும். அதன் பின் மழை பெய்தால் தான்...தண்ணீர்!
"ரூ.6 கோடி மதிப்பில், கூடுதல் போர்வெல் அமைக்கப் போவதாக,' மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் பயன்கிடைக்குமா என்பதும், கேள்விக்குறியே. ஏற்கனவே மாநகராட்சியில் போடப்பட்ட போர்வெல்களில் 60 சதவீதத்திற்கும் மேல், தூர்ந்து போய், பயனின்றி உள்ளது.
இன்றைய நிலவரப்படி, நிலத்தடி நீர் மட்டம், எட்டாத அடிக்கு சென்று விட்டது. நீர் நிலைகள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டதே, இதற்கு முக்கிய காரணம்.
மாநகராட்சி முழுவதும் இப்பிரச்னை இருந்தாலும், கடும் பாதிப்பிற்கு உள்ளாகியிருப்பது, மண்டலம் 2(வடக்கு) பகுதிகள் தான். குடிநீரும் சரி, புழக்கத்திற்கான நீரும் சரி, மாதக்கணக்கில் வராமல், திண்டாடி வருகின்றனர். லாரிகளில் அவ்வப்போது வரும் மாநகராட்சி குடிநீர், காய்ந்த குடங்களின் தாகம் தீர்க்கிறதே தவிர, மக்களின் முழுத்தேவையை பூர்த்தி செய்யவில்லை.
வார்டுகளின் போர்வெல் பொய்த்ததால், தனியார் டிராக்டர்களில் வரும் நீரை, பணம் கொடுத்து வாங்கி புழக்கத்திற்கு சமாளித்து வருகின்றனர். ஒரு லோடு(6,000 லிட்டர்) உவர்ப்பு நீர் ரூ.500க்கு விற்கப்படுகிறது. சராசரியாக 6 குடும்பங்கள், அந்த நீரை பகிர்ந்து கொண்டு, தலா ரூ.100 செலவு செய்கின்றனர். இரு நாட்களுக்கு ரூ.100 வீதம், மாதம் ஒன்றுக்கு ரூ.1,500 புழக்கத்திற்கான நீருக்கு மட்டும் செலவிட வேண்டியுள்ளது.
ரேஸ்கோர்ஸ், டி.ஆர்.ஓ, காலனியில் பல வீடுகளின் நிலை இது தான். வீட்டு வசதி வாரியத்தின் பாராமுகத்தால், அங்குள்ள நீர்தேக்க தொட்டிகள் வறண்டு போய் உள்ளன. மாதக்கணக்கில் நீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
பல முறை புகார்
புலம்பும் மண்டலம்
மண்டலம் 2ன் தலைவர் ஜெயவேல் கூறியதாவது: என் வீட்டின் குழாயில் குடிநீர் வந்து ஆறு மாதம் ஆகிவிட்டது. தொட்டி நிறைய நீர் உள்ளது; ஆனால், வினியோகத்தில் வருவதில்லை. நானும் பலமுறை புகார் அளித்துவிட்டேன். காரணம் புரியாமல் அதிகாரிகள் விழிக்கின்றனர். மாற்று வழி ஏற்பாடுகள் நடந்து வருவதால், விரைவில் சரியாகும் என, எதிர்பார்க்கிறேன், என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.