பெரம்பலூர்:
"நகரில் ஓடிக்கொண்டிருக்கும் ஆட்டோக்களில் கூடுதல் பயனிகளை
ஏற்றிச்சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, வட்டார போக்குவரத்து
அலுவலர் குவலயநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அவர் வெளியிட்ட
அறிக்கை:பெரம்பலூர் நகரில் ஆட்டோக்கள் அதிக எண்ணிக்கையில்
ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் அபே ஆட்டோக்களும் அடங்கும். சாதாரண வகை
ஆட்டோக்களில், 3 +1 நபர்களும் பள்ளிக்குழந்தைகள், 14 வயதுக்குட்பட்டோர்,
ஐந்து குழந்தைகளையும் ஏற்றிச்செல்ல அரசு அனுமதித்துள்ளது. ஷேர்
ஆட்டோக்களில், 5+1 நபர்கள் மட்டுமே ஏற்றிச்செல்ல அரசு
உத்தரவிட்டுள்ளது.இதற்கு மேல் ஏற்றிச் செல்லப்படும் ஆட்டோக்களின்
அனுமதிச்சீட்டின் மீது, போலீஸ் மற்றும் போக்குவரத்து துறையால் கடும்
நடவடிக்கை எடுக்கப்படும் என, இதன் மூலம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு
தெரியப்படுத்தப்படுகிறது.
பொதுமக்கள் கவனத்துக்கு: பொதுமக்களுக்கு சேவை
புரிய டவுன் பஸ்கள், ஆட்டோக்கள் அதிகம் உள்ளதால், குறிப்பிட்ட அளவு
பயணிகளுக்கு மேல் ஆட்டோக்களில் ஏற வேண்டாம்
எனக்கேட்டுக்கொள்ளப்பபடுகிறார்கள். ஆட்டோக்களின் கட்டமைப்பு, 3+1 மற்றும்
ஷேர் ஆட்டோக்களில், 5+1 என்ற அளவுக்கு மட்டுமே ஏற்றிச்செல்லும் வண்ணம்
வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே அதற்கு மேல் ஏற்றிச்செல்லப்படும்
எண்ணிக்கையா,ல் வாகனத்தின் நிலைப்புத்தன்மை இன்றி விபத்துக்கள் ஏற்பட
வாய்ப்பாகிறது.பொதுமக்கள் கூடுதல் பயணிகள் உள்ள ஆட்டோக்களில் பயணம் செய்ய
வேண்டாம் என்றும், அவ்வாறு ஏற்றும் ஓட்டுனர்களின் விபரத்தை,
போக்குவரத்துத்துறைக்கு துறைக்கு தெரிவிக்கும்படியும்
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.பள்ளிக்குழந்தைகளின் பெற்றோர்களுக்கு:
பள்ளிக்குழந்தைகளை அதிக எண்ணிக்கையில் ஏற்றிச்செல்லும் ஆட்டோக்களில்,
தங்கள் குழந்தைகளை அனுப்பக்கூடாது. என்ன நடக்கிறது என்ற ஆபத்தை உணரக்கூட
இயலாத சிறுவர்களின் உயிருடன் விளையாடும் ஆபத்தை நாமே வலிய
திணிக்கக்கூடாது.அபே ஆட்டோக்களில், ஐந்து பள்ளிக்குழந்தைகளுக்கு மேல்
ஏற்றும் ஓட்டுனர்கள் மீது உடனடியாக போலீஸ் மற்றும் போக்குவரத்து துறைக்கு
புகார் அளிக்க வேண்டும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.