ஓசூர்:
ஓசூர் அருகே தொரப்பள்ளியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்படும்
பாலம் பணி மந்தமாக நடக்கிறது. இதனால், பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
ஓசூர்
அருகே தொரப்பள்ளி கிராமம் வழியாக தென்பெண்ணை ஆறு செல்கிறது. இப்பகுதியில்
தென்பெண்ணை ஆறு கடக்கும் பகுதியில் ஓரே ஒரு தரைப்பாலம் மட்டும் இருந்தது.
மழைக்காலத்தில் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கும் ஏற்படும் போது, இந்த
தரைப்பாலம் நீரில் மூழ்கி தொரப்பள்ளி கிராமத்துக்கு போக்குவரத்து
துண்டிக்கப்படும்.
இதனால், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கிராமத்தை
விட்டு வெளியேற முடியாமல் கடந்த, 20 ஆண்டாக கடும் பரிதவித்து வந்தனர்.
இந்நிலையில் தொரப்பள்ளியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, மூன்று கோடியே 75
லட்சம் ரூபாயில் புதிய பாலம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.இந்த
பாலம் பணி விரைவாக நடக்காமல் மந்தகதியில் நடக்கிறது. பாலம் பணிக்காக
தரைப்பாலம் முற்றிலும் இடிக்கப்பட்டு, ஆற்றின் நீர், ஒரே பகுதியில்
செல்லும்படி திருப்பிவிடப்பட்டுள்ளது. தற்போது, ஆற்றில் குறைந்தளவு தண்ணீர்
வருவதால் பொதுமக்கள், ஆற்றை எளிதாக கடந்து செல்கின்றனர்.மழை பெய்தால்
ஆற்றில் சிறு வெள்ளப்பெருக்கு வந்தால் கூட ஆற்றை பொதுமக்கள் கடக்க
முடியாது. பாலம் அமைக்கும் பணி மெதுவாக நடப்பதால் பாலம் அமைக்கும்
எப்போதும் முடியும் என தெரியவில்லை.மேலும், பாலம் அமைக்கும் பணிக்கு
பில்டர்மணல்(செயற்கைமணல்) பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. பாலம்
பணியை விரைந்து முடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.