ஓசூர்:
மலைக்கிராமங்களில் வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை காக்க விவசாயிகள்
துணிகளை குச்சிகளில் கட்டி பறக்க விட்டு வருகின்றனர்.கிருஷ்ணகிரி
மாவட்டத்தில், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த கால்நடை வளர்ப்பு தொழில்
பிரதானமாக உள்ளது. குறிப்பாக வனப்பகுதிகளையொட்டிய ஓசூர், தேன்கனிக்கோட்டை
தாலுகாவில் விவசாயிகள், காய்கறிகள், மலர்கள், கரும்பு, சோளம், ராகி, வாழை
மற்றும் நெல் உள்ளிட்ட பல்வேறு விவசாய பயிர்களை, நவீன தொழில்நுட்டத்தில்
அதிகளவு சாகுபடி செய்கின்றனர்.
குறிப்பாக இங்கு உற்பத்தியாகும் மலர்கள்,
காய்கறிகள், ராகி ஆகியவை உள்ளூர் தேவைக்கு போக வெளிநாடுகள், வடமாநிலங்கள்
மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு தினசரி டன் கணக்கில்
ஏற்றுமதியாகிறது.விவசாயத்தை நம்பி விவசாயிகள் மட்டுமின்றி, விவசாயிகள்,
கூலித்தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
கடந்த மூன்று ஆண்டாக
வனப்பகுதிகளில் வறட்சியால் வனவிலங்குகள் அடிக்கடி காடுகளை விட்டு வெளியேறி
மலைக்கிராமங்களில் புகுந்து வருகின்றன.யானைகள், காட்டுப் பன்றிகள் அதிகளவு
மலைக்கிராமங்களில் புகுந்து விவசாயிகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி
வருகின்றன. வனத்துறையினர், ஊழியர்கள் பற்றாக்குறை மற்றும் தொழில்நுட்ப
கருவிகள் இல்லாமல் வனவிலங்குகள் காடுகளை விட்டு வெளியேறுவதை தடுக்க
முடியாமல் திணறுகின்றனர்.வன விலங்குகளால் சேதமடையும், விவசாய பயிர்களுக்கு
உடனுக்குடன் முழுமையான நிவாரணமும் வனத்துறையினர் வழங்குவதில்லை. அதனால்,
ஓசூர், தேன்கனிக்கோட்டை தாலுகாவில் விவசாயிகள், தங்கள் விளைபயிர்களை
காப்பாற்ற வயல்கள், தோட்டங்களை சுற்றிலும் யானைகள், காட்டுப்பன்றிகள்
புகாமல் இருக்க வெள்ளை துணிகள், வெள்ளை சாக்குகளை கட்டி தொங்கவிட்டு
தற்காப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.