நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலய தியான மண்டபத்தில், இந்தியாவில் உள்ள, லத்தின் முறை கத்தோலிக்க ஆயர்களின் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு, ஆயர்கள் மாநாடு துவங்கியது.இந்திய கத்தோலிக்க சபையின் அருள் பணித் திட்டம் என்ற தலைப்பில் நடந்த மாநாட்டை, இந்திய ஆயர் பேரவை தலைவர் கர்தினால் டெப்போ துவக்கி வைத்தார்.இதில், இன்றைய சூழலில், ஆன்மிகம், கல்வி, சமூகப் பணி, மருத்துவப் பணி என, பல துறைகளில், கத்தோலிக்க சபை ஆற்றும் பணிகளை மேம்படுத்துவது குறித்து விவாதித்தனர். 170 மறை மாவட்ட ஆயர்கள் பங்கேற்றனர்.மாநாடு, 10ம் தேதி வரை நடக்கிறது. நிறைவில், போப்பின் சிறப்பு தூதர் கர்தினால் பிலோனி, இந்திய தூதர் பொன்னாக்கியோ பங்கேற்று, வேளாங்கண்ணியில் புதிதாக கட்டிய, "விண்மின்' தேவாலயத்தை திறந்து வைக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.