சத்தியமங்கலம்: தாளவாடி அருகே மின்சாரம் தாக்கி பெண் யானை பலியானது.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனக்கோட்டத்துக்கு உட்பட்டது தாளவாடி வனச்சரகம். இதற்கு உட்பட்ட திகினாரை வனப்பகுதியில், காட்டுயானைகள் கூட்டம், கூட்டமாக வசிக்கின்றன. தற்போது வனப்பகுதியில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளதால், யானைகள் தண்ணீர் தேடி விவசாய நிலத்துக்கு செல்ல தொடங்கியுள்ளது.நேற்று அதிகாலை தாளவாடி அருகே உள்ள பைனாபுரம் என்ற இடத்தில் கருப்பணன் தோட்டம் என்ற விவசாய நிலப்பகுதிக்கு, ஆறு வயது மதிக்கதக்க பெண் யானை ஒன்று, தண்ணீர் தேடி சென்றது. அங்கு ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகே, ஆழ்குழாய் கிணறுக்கு பொறுத்தப்பட்ட மோட்டாரின் மின்சார ஸ்விட்ச் போர்டு இருந்தது.தண்ணீர் தேடி வந்த யானை, தன் துதிக்கையால் மின்சார ஸ்விட்ச் போர்டில் உள்ள ஒயரை பிடித்து இழுத்துள்ளது. அப்போது ஒயர் அறுந்து, அதில் மின்சாரம் வந்ததால், யானை மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்தில் இறந்தது. தகவல் அறிந்து, சத்தியமங்கலம் மாவட்ட வனஅதிகாரி ராஜ்குமார், தாளவாடி ரேஞ்சர் உதயராஜ் மற்றும் வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.வனத்துறை மருத்துவர் மனோகரன், பிரேத பரிசோதனை செய்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.