அதிகம் டிவி பார்த்தால் "அதுக்கு" ஆபத்து
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சிட்னி: அதிக நேரம் டிவி பார்க்கும் ஆண்களுக்கு விந்து அணுக்களின் எண்ணிக்கை பாதி அளவு குறைவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரிட்டிஷ் ஜெர்னல் ஆப் ஸ்போர்ட்ஸ் மெடிசின் என்ற பத்திரிகை பல ஆண்டுகளாக மருத்துவ ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. இளம் வயதுடைய ஆண்கள் அதிக நேரம் டிவி பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வில் 18 வயது முதல் 22 வயதுடைய 189 ஆண்கள் உட்படுத்தப்பட்டனர். அதிக நேரம் டிவி பார்க்கும் ஆண்களிடம் ஏற்படும் விந்து அணு மற்றம் பற்றி கண்டறிவதுதான் இந்த ஆய்வின் நோக்கம். அதன் படி வாரத்திற்கு 20 மணி நேரம் அல்லது அதற்க்கு மேல் டிவி பார்க்கும் இளம் வயது ஆண்களிடம், அவ்வாறு டிவி பார்க்காத ஆண்களை விட சராசரியாக 44% விந்து அணுக்கள் குறைவாக உள்ளதை கண்டறிந்துள்ளனர். அதே போன்று வாரத்திற்கு 15 மணி நேரம் அல்லது அதற்கு மேல் உடற் பயிற்சி செய்யும் ஆண்களுக்கு , வாரத்திற்கு 5 மணி நேரம் உடற் பயிற்சி செய்யும் ஆண்களை விட விந்து அணுக்களின் எண்ணிக்கை 73% அதிகம் உள்ளதும் தெரியவந்துள்ளது. இவைகள் மட்டும் இல்லாது அதிக மது அருந்துவது, புகைப்பது, நேரம் தவறி உண்பது , உறங்குவது என மனித வாழ்விற்கு பொருந்தாத வகையில் இன்றைய இளம் தலைமுறையினர் கடைபிடிக்கின்றனர். இதனால் குழந்தை பிறப்பு மட்டும் இன்றி பல வகை பாதிப்புகளுக்கு உள்ளாகி இளம் வயதில் தங்கள் வாழ்கையை முடித்துக்கொள்கின்றனர்.
- நமது செய்தியாளர் சுந்தர்
AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
naasama ponavan - bangalore,இந்தியா
06-பிப்-201315:18:16 IST Report Abuse
naasama ponavan super
Rate this:
Share this comment
Cancel
sitaramenv - Hyderabad,இந்தியா
06-பிப்-201314:43:25 IST Report Abuse
sitaramenv அதுக்கு ஆபத்து என்றால்......இந்த காலத்து இளைஞர்களும் இளைஞிகளும் தூக்கி எரிந்து விடுவார்கள் தொலைக்காட்சியில்
Rate this:
Share this comment
Cancel
deivasigamani - Erode,இந்தியா
06-பிப்-201313:44:47 IST Report Abuse
deivasigamani நாட்டுல மக்கள் தொகை குறைய உதவுகின்றோம் என தொலைகாட்சி நிறுவனங்கள் இனிமே மார் தட்டிக்கொள்ளலாம்
Rate this:
Share this comment
Cancel
deivasigamani - Erode,இந்தியா
06-பிப்-201313:42:13 IST Report Abuse
deivasigamani So TV channels help in Population control. Good.
Rate this:
Share this comment
Cancel
v.sundaravadivelu - Tiruppur,இந்தியா
06-பிப்-201311:27:52 IST Report Abuse
v.sundaravadivelu என்னங்கடா பொழப்பு இது.. மனுஷன் டிவி யக்கூட நிம்மதியா பார்க்க முடியாது போல..இனி அவன் அவன் ஆப் பண்ணிட்டு படுக்கைக்குப் போக வேண்டியது தான்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்