ஆசிட் விற்பனையை ஏன் நிறுத்தக்கூடாது? மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: ஆசிட் வீச்சு சம்பவங்களை தடுக்க, ஆசிட் விற்பனையை தடை செய்தால் என்ன என மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த 2006ம் ஆண்டு தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த லட்சுமி என்பவர், சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் ஆசிட் வீச்சை வழக்குகளை விசாரிக்க இந்திய குற்றவியல் சட்டத்தில் தனிப்பிரிவு உருவாக்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ சிகிச்சையை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளே ஏற்கவேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இம்மனு மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. அப்போது பேசிய நீதிபதிகள் ஆசிட் வீச்சு தொடர்பாக மத்திய மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அதிருப்தி தெரிவித்தனர். ஆசிட் வீச்சு சம்பவம் தொடர்பாக உறுதியான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்கவேண்டும் என்றும், ஆசிட் வீச்சில் பாதிக்கப்படுபவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை அதிகரிக்கப்படவேண்டும் எனவும் நீதிபதிகள் வலியுறுத்தினர். மேலும், மத்திய உள்துறை செயலர் தலைமையில் அனைத்து மாநில தலைமைச்செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படவேண்டும் என்றும், அதில் ஆசிட் விற்பனையை தடை செய்தல், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு, சிகிச்சை மற்றும் நிவாரணம் அளிப்பது குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

மேலும் விசாரணையின் போது, ஆசிட் வீச்சு தொடர்பாக இந்திய குற்றவியல் சட்டத்தின் திருத்தம் கொண்டு வரப்பட்டு, இந்த குற்றம் செக்ஷன் 326 (ஏ) மற்றும் (பி) ஆகியவற்றின் கீழ் வர வழிவகை செய்யப்படும் என மத்திய அரசு வக்கீல் தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
priyadharshan - Chennai,இந்தியா
07-பிப்-201308:14:05 IST Report Abuse
priyadharshan இப்படியே தடை செய்துகொண்டு போனால் நாட்டில் ஒன்றுமே இருக்காது. வெட்டுராங்கனு அருவாள குத்துராங்கனு கத்திய வெடிக்குதுன்னு காஸ் சிலிண்டர ................
Rate this:
Share this comment
Cancel
amirthalinkam.s - namakkal,இந்தியா
07-பிப்-201306:05:25 IST Report Abuse
amirthalinkam.s ஆசிட் விற்பனையை எப்படி நிறுத்தறது ?, முகத்தில் வீச மட்டுமா பயன்படுது, தொழில் சார்ந்த தேவையை எப்படி பூர்த்தி செய்வது.
Rate this:
Share this comment
Cancel
sulochana kannan - sydney,ஆஸ்திரேலியா
07-பிப்-201302:36:28 IST Report Abuse
sulochana kannan ஆமாம் அப்போது தானே ஆசிட் விற்பனையும் கள்ளத்தனமாக விற்பனை ஆகும். அதுலே பணம் பண்ணலாம். இதெல்லாம் வேலைக்கு ஆகாது. முதல்லே எல்லா லெவல் லேயும் ஊழல் நின்றாலே சரியாகும்.
Rate this:
Share this comment
Cancel
poiyyan - doha,கத்தார்
07-பிப்-201302:05:29 IST Report Abuse
poiyyan சில வருடங்களுக்கு முன் தடை செய்திருந்தால் சந்திரலேகா I A S ( சு. சாமி கட்சி ) அவர்களின் முகம் பாதிக்கப்பட்டிருக்காது
Rate this:
Share this comment
Cancel
v j antony - coimbatore,இந்தியா
06-பிப்-201314:20:57 IST Report Abuse
v j antony இது எப்படி இருக்கு என்றால் தங்கம் கொள்ளை தடுப்பதற்கு தங்கத்தையே தடை செய்தல் என்ன என்று கேட்பதுபோல் உள்ளது . சட்டம் ஒழுங்கை கவனிக்க சொல்லுங்கள் முதலில்
Rate this:
Share this comment
Cancel
சத்தி - Bangalore,இந்தியா
06-பிப்-201313:38:27 IST Report Abuse
சத்தி வழக்கு எண் 18/9 படம் பார்த்து உண்மை நிலைவரத பார்த்த மாதிரி அதிர்ந்தேன், இம்மாதிரி வன் செயலுக்கு மிக கடுமையான சட்டம் போட்டாலும், வேற ஒருத்தர சிக்கவைத்து மூடிவிடும் நிலை உள்ளபோது, அசிட் கிடைபத்தையே தடை போட்டால் புண்ணியமாய் போகும்.
Rate this:
Share this comment
Cancel
mangai - Chennai,இந்தியா
06-பிப்-201313:20:13 IST Report Abuse
mangai நானும் இதே கேள்வி தன கேக்குறேன்.. ஒன்னு சம்பவம் நடக்காத மாறி தண்டனை கடுமையா இருக்கணும் இல்லாட்டி பொட்டிக்கடைல சிகரெட் வாங்குற மாறி ஈஸியா கிடைக்குறத தடுக்கணும்..
Rate this:
Share this comment
Cancel
unmai - chennai,இந்தியா
06-பிப்-201313:04:14 IST Report Abuse
unmai மொதல்ல சாராயத்தை ஏன் விற்காமல் இருக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் கேட்டுஇருக்கணும்.. எல்லா குற்றங்களுக்கும் முதல் காரணம் மது தான் என்பது எப்போது புரிய போகிறது..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்