பாடியாலா: பஞ்சாபில் முன்னாள் முதல்வர் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பயங்கரவாதிக்கு வெடிமருந்து கடத்தல் வழக்கில் 10 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது. பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த்சிங், 1995-ம் ஆண்டு கொல்லப்பட்டார்.இந்த வழக்கில் பயங்கரவாதி, பல்வந்த்சிங் ரஜோனாவுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. பின்னர் அப்போதைய பஞ்சாப் அரசு தலையிட்டதன் பேரில் தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பயங்கர வெடிபொருள் வைத்திருந்ததாக ரஜோனா மீது தொடரப்பட்ட வழக்கு இன்று பாடியாலா செஷன்ஸ் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதில் பாடியாலா மாவட்டத்தில் கடந்த 1995-ம் ஆண்டு 80 கிலோ. ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்தினை பதுக்கி வைத்திருந்தாக , ரஜோனாவிற்கு 10ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி சஞ்சீவ் பெர்ரி தீர்ப்பளித்தார்.. இதே போன்று அவர் மீதான ஆயுதகடத்தல் வழக்கு ஒன்றில் விசாரணையை வரும் 16-ம் தேதி தள்ளி வைத்தார்..
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.