புதுடில்லி : சிறந்த மற்றும் நல்ல நிர்வாகத்தின் மூலமே, உண்மையான சுதந்திரத்தை நாட்டு மக்கள் அனைவரும் பெற முடியும், தற்போது நம்நாடு அத்தருணத்திற்காகவே காத்திருப்பதாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார். டில்லியில் உள்ள ஸ்ரீராம் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய குஜராத் முதல்வர் மோடி கூறியதாவது, நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்கு, குஜராத் மாநிலம் முன்னின்று செயல்பட்டது என்பதை யாரும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது. தேசப் பிதாவான மகாத்மா காந்தி, தங்கள் மாநிலத்தை சேர்ந்தவர் என்று கூறிக்கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன். குஜராத் அரசு, சிறந்த நிர்வாகத்தை அளித்து வருவதற்கு மககளுடன் இணைந்து செயல்படுவதாலேயே முடிகிறது என்று அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.