புதுடில்லி : மத்திய அமைச்சர் ஷிண்டே மீது தொடுக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு உள்நோக்கம் கொண்டது என்று டில்லி போலீசார் கூறியுள்ளது, காவல்துறை மக்களின் நண்பன் என்பதில் சிறிய மட்டுல்ல பெரிய அளவிலேயே சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பொதுநல ஆர்வலர்கள் கூறியுளளனர். பயங்கரவாத செயல்களுக்கு இந்து அமைப்புகளே காரணம் என, சமீபத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே கூறியிருந்தார். ஷிண்டேவின் இந்த கருத்திற்கு நாடுமுழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பார்லிமென்ட் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் ஷிண்டே புறக்கணிப்பதாக, பா. ஜ. தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஷிண்டே மீது நடவடிக்கை கோரி, கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. இவ்வழக்கு, வரும் 11ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. இதனிடையே, மத்திய அமைச்சருககு ஆதரவாக டில்லி போலீஸ் கருத்து தெரிவித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.