குன்னூர்:குன்னூரில் மகளிர் சுய உதவிக்குழு பொருட்காட்சியில் இடம் பெற்ற மண்பாண்டங்கள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தன.
குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில், சுய உதவிக்குழுக்களின் "பொருட்காட்சி' துவங்கியது. இந்த கண்காட்சியில் நீலகிரி, சேலம், திருவண்ணாமலை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 10 மகளிர் சுய உதவி குழுக்களின் பொருட்கள் காட்சி வைக்கப்பட்டிருந்தது.
நீலகிரி சார்பில் கோத்தரின மக்களின் மண் பாண்டங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பானைகள் மட்டுமின்றி நவீன காலத்துக்கு ஏற்ற வகையில் பவுல்கள், ஊதுபத்தி ஸ்டாண்ட், சாம்பிராணி தூப கலசம் ஆகியவை மண்ணிலேயே செய்யப்பட்டிருந்தது. திருவண்ணாமலையை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழு சார்பில், ஒரு அரிசியில் பெயர் எழுதிய சாவி கொத்து பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.
இந்த கண்காட்சி இன்று நிறைவடைகிறது.பொருட்காட்சியை மகளிர் திட்ட இயக்குனர் கோமதி துவக்கி வைத்தார். உதவி திட்ட இயக்குனர் ஹென்னா டிக்சன், கல்லூரி முதல்வர் ஷீலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.