ஊட்டி:ஊட்டி ஒய்.எம்.சி.ஏ., மற்றும் நகர மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில், உலக நகைச்சுவை தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
இதில், ஒய்.எம்.சி.ஏ., செயலர் மேக்ஸ் வில்லியர்ட் வரவேற்று பேசுகையில், ""பல வித சிந்தனையோடு படுக்கைக்கு சென்று, அதே சிந்தனையில் எழுந்து, பணிக்கு சென்று, மனதை ரிலாக்ஸ் செய்ய மாலை நேரங்களில் "டிவி' முன் அமர்ந்தால், அடுத்தடுத்து வரும், அழ வைக்கும் சீரியல்கள் மனதை மேலும் கனமாக்குகின்றன. இத்தகைய நிலையில் இருந்து வெளிவந்து, குடும்பமாக அமர்ந்து, கலந்து பேசி, சிரித்து மகிழ, நேரம் ஒதுக்க வேண்டும்,'' என்றார்.
மாவட்ட உதவி தொடக்க கல்வி அலுவலர் ஜெயஸ்ரீ பேசுகையில், ""சிரிப்பு, என்பது நோய் தீர்க்கும் மருந்து. இன்றைய காலகட்டத்தில், சிரிக்கும் நேரம் குறைந்து கொண்டே போகிறது. வேலை பளு நிறைந்த, கடினமான வாழ்க்கை சூழலில் கூட, நேர்மறை சிந்தனையோடு வாழ்ந்தால், உயர்ந்த இடத்துக்கு செல்ல முடியும்,'' என்றார்.
உதகை நகர விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்த்தனன், "மலை சாரல்' கவிமன்ற தலைவர் சோலூர் கணேசன் பேசினர். தனியார் அறக்கட்டளை செயலர் ஜெனிதா ஆகியோர் சிரிப்பதன் அவசியம் குறித்து குழந்தைகளிடம் வலியுறுத்தினார். தொடர்ந்து, ஒய்.எம்.சி.ஏ., மழலையர் பள்ளி குழந்தைகளின் சிரிப்பூட்டும் நடன, நாட்டிய, கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியை பேபி பிரசில்லா நன்றி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.