பந்தலூர்:நெல்லியாளம் நகராட்சியின் 9வது வார்டில் குடிநீர் ஆதாரங்கள் அதிகளவில் இருந்தும், முறையான திட்டமிடுதல் இல்லாததால் குடிநீருக்காக கிராம மக்கள் திண்டாடும் நிலை தொடர்கிறது.
நெல்லியாளம் நகராட்சியின் 9வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் காட்டிமட்டம், மூச்சிக்குன்னு கிராமங்கள் அமைந்துள்ளன. இங்கு 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியிருந்து வருகின்றன. இதில் காட்டிமட்டம் பகுதிக்கு தண்ணீர் சப்ளை செய்யும் குடிநீர் கிணற்றின் மோட்டார் பழுதடைந்து 6மாதங்கள் கடந்தும் இதுவரை சீரமைக்கததால் கிராமத்து மக்கள் தண்ணீருக்காக 2.கி.மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நாள்தோறும் 250 ரூபாய்க்கு வாடகை வாகனம் மூலம் தண்ணீர் எடுத்து செல்கின்றனர். அதேவேளையில், இதனை ஒட்டி அமைந்துள்ள மூச்சிக்குன்னு கிராமத்தில் பாயும் நீரோடையில் கோடை காலத்திலும் தண்ணீர் தேவையான அளவு காணப்படுகிறது. கேரளா மாநிலம் நோக்கி பாயும் இந்த நீரோடை தண்ணீரை தேக்கி வைத்து, நகராட்சி மூலம் முறையான குடிநீர் திட்டத்தை செயல்படுத்தினால், காட்டிமட்டம், மூச்சிக்குன்னு பகுதி மட்டுமின்றி தேவாலா சுற்றுவட்டார பகுதி மக்களுக்கும் குடிநீர் வினியோகம் செய்ய முடியும்.
இது குறித்து இப்பகுதி வார்டு கவுன்சிலர் விஜயகுமார், நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.