உடுமலை:உடுமலை போலீஸ் உட்கோட்டத்தில், அதிகரித்துள்ள காலிப்பணியிடங்களால், பல்வேறு திருட்டு மற்றும் குற்ற வழக்குகளுக்கு தீர்வு கிடைக்காமல், வழக்குகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
உடுமலை போலீஸ் உட்கோட்டத்தில், உடுமலை நகரம், மகளிர் போலீஸ், தளி, குடிமங்கலம், மடத்துக்குளம், கொமரலிங்கம், அமராவதிநகர், கணியூர் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன.
குற்றங்களின் அடிப்படையில், ஹெவி ஸ்டேஷன்களாக பிரிக்கப்பட்ட உடுமலை, மடத்துக்குளம் ஆகிய இரண்டு ஸ்டேஷன்களுக்கும் சேர்த்து ஒரு இன்ஸ்பெக்டர் மட்டுமே பணியில் உள்ளார்.
இந்த ஒரு இன்ஸ்பெக்டர் கட்டுப்பாட்டின் கீழ் இரண்டு ஹெவி ஸ்டேஷன்கள் மற்றும் தளி, குடிமங்கலம், கொமரலிங்கம், அமராவதிநகர், கணியூர் ஆகிய லைட் ஸ்டேஷன்களும் தற்போது இயங்கி வருகின்றன.
ஒரே நேரத்தில் குற்றங்கள் நடக்கும் போது மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கூடுதல் பொறுப்பாக பிற ஸ்டேஷன் பணிகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு, ஒரு உட்கோட்டத்திற்கு ஒரு இன்ஸ்பெக்டர் என்ற அவலத்தால், பல்வேறு குற்றத்தடுப்பு பணிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன.
இதே போல், லைட் ஸ்டேஷன்களில் எஸ்.ஐ., பணியிடங்களும் அதிகளவு காலியாக உள்ளன. சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்றங்கள் அதிகளவு நடக்கும் உடுமலை நகரப்பகுதியிலுள்ள ஸ்டேஷனில், மூன்று எஸ்.ஐ., பணியிடங்கள் காலியாக உள்ளன.
தற்போது ஒரு பெண் எஸ்.ஐ., மட்டுமே சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்றம் ஆகிய இரு பிரிவிற்குரிய பணிகளையும்? கண்காணித்து வருகின்றனர்.
புறநகர் பகுதியிலு<ள்ள ஸ்டேஷன் கட்டுப்பாட்டு கிராமங்களில் "சில்லிங்' மது விற்பனை, லாட்டரி மற்றும் கஞ்சா விற்பனை ஆகியவை கட்டுப்பாடு இல்லாமல் செல்கின்றன. காலிப்பணியிடங்களால் போலீசார் ரோந்து செல்வதை தவிர்ப்பதால், பல்வேறு கிராம நிழற்குடைகள் இரவு நேரங்களில் "பாராக' மாற்றப்பட்டுள்ளன.
பல மாதங்களாக குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால், பல்வேறு திருட்டு வழக்குகளில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் பாதிக்கப்பட்டவர்கள் வேதனையடைந்துள்ளனர்.
நிலுவையில் இருக்கும் வழக்குகள்:
அண்ணா குடியிருப்பில், தனியார் வங்கி துணை மேலாளர் வீட்டில் 52 பவுன் நகை திருடப்பட்ட வழக்குடன், நூறு பவுனுக்கும் மேலாக திருடு போன 10 க்கும் அதிகமான வழக்குகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
பொன்னேரி கிராமத்தில், விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால், கொலையாளி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. சம்பவம் நடந்து பல மாதங்களாகியும் போலீசார் மெத்தனம் காட்டுவதால் அப்பகுதி மக்கள் வேதனையில் உள்ளனர்.
அதிகப்பணிப்பளு காரணமாக போலீசாரின் வேலைத்திறனும் பாதிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து திருப்பூர் எஸ்.பி., உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.