பெங்களூரு : "" மிக முக்கியத்துவம் வாய்ந்த, குவாடர் துறைமுகத்தை, சீனாவிடம் ஒப்படைக்க, பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. இது, கவலைக்குரிய விஷயம்,'' என, ராணுவ அமைச்சர், அந்தோணி கூறினார்.
பெங்களூரில், ராணுவ அமைச்சர், அந்தோணி கூறியதாவது:அரபிக் கடல் பகுதியில் உள்ள, குவாடர் துறைமுகம், பாகிஸ்தானுக்கு சொந்தமானது. இந்த துறைமுகத்தை மேம்படுத்தும் பணியை, சிங்கப்பூர் நிறுவனம், மேற்கொண்டிருந்தது. தற்போது, மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்காக, இந்த துறைமுகம், சீனாவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.இது தொடர்பாக, இரு நாடுகளுக்கும் இடையே, ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இது<, நம் நாட்டின் பாதுகாப்புக்கு கவலை அளிக்கும் விஷயம் என்பதை, நேரடியாகவே, தெரிவிக்க விரும்புகிறேன். "இந்தியாவை அச்சுறுத்துவதற்காக, இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை' என, சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும், இது, கவலை அளிக்கும் விஷயம் என்பதை, மறுப்பதற்கு இல்லை. தற்போது, ஆப்கனில் முகாமிட்டுள்ள, அமெரிக்க ராணுவம், அடுத்த ஆண்டில், அங்கிருந்து, வாபஸ் பெறப்படவுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் அச்சுறுத்தல்களை, அரசு உணர்ந்துள்ளது. எனவே, நம் நாட்டின் பாதுகாப்பை, மேலும் பலப்படுத்துவதற்கு, போதிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அந்தோணி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.