பொள்ளாச்சி : பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் நிலுவை பணிக்கு, இறுதி செய்த டெண்டருக்கு பணிகள் துவங்க உத்தரவு வழங்காமல், காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. இதனால், ஸ்டேஷன் கட்டுமான பணிகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி வழித்தடம் அகல ரயில்பாதையாக மாற்றும் பணி கடந்த 2008ம் ஆண்டு துவங்கப்பட்டது. பணிகளை விரைந்து முடித்து ரயில் போக்குவரத்து துவங்க அதிகாரிகள் திட்டமிட்டாலும், பல்வேறு காரணங்களால், இப்பணி அனைத்தும் ஆமை வேகத்தில் நடந்தது வருகிறது.
பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் கட்டுமான பணிகள் 2010ம் ஆண்டு துவங்கப்பட்டது. புதிதாக ஸ்டேஷன் கட்டடம் மட்டும் கட்டப்பட்டுள்ளது. இதிலும், 20 சதவீத பணிகள் நிலுவையில் உள்ளன. பிளாட்பார்ம், சுரங்க நடைபாதை, இருப்பு பாதை, சிக்னல் அமைத்தல், குடிநீர் வசதி ஏற்படுத்துதல் உட்பட அனைத்து பணிகளும் கிடப்பில் உள்ளன.
ஏற்கனவே, டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர் பணியில் வேகம் காட்டாததால், ரத்து செய்து, மறு டெண்டர் விடப்பட்டது.இதில், ஒரு நிறுவனம் உறுதி செய்யப்பட்டது. இந்த நிறுவனத்துக்கு, பணி துவங்குவதற்கான உத்தரவு வழங்காமல் நான்கு மாதங்களாக காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. உத்தரவை எதிர்நோக்கி, ஒப்பந்ததாரரும் காத்துள்ளார். ரயில்வே ஸ்டேஷனில், "எர்த் ஒர்க்' பணிகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டன.
அதன்பின், மற்ற பணிகளை மேற்கொள்ள உத்தரவு இல்லாததால், நிலுவை பணிகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால், குறிப்பிட கெடுவுக்குள் பணிகளை நிறைவு செய்து, ரயில் போக்குவரத்து துவங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ரயில்வே பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யவுள்ள நிலையில், நிலுவை பணிகளை உடனடியாக துவங்க வேண்டும், என, பல்வேறு தொழில் அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வருகிறது.
ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், "பொள் ளாச்சி ரயில்வே ஸ்டேஷனுக்கு நிலுவை பணிக்கு விண்ணப்பித்த நிறுவனம் ஒரு சில ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை. இதனால், உத்தரவு வழங்குவதில் தாமதம் ஏற்படு
கிறது. பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளதால், இந்நிறுவனத்துக்கே பணிக்கான உத்தரவு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விடுபட்ட ஆவணங்களை உடனடியாக சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவற்றை வழங்கினால், பணிகள் விரைவில் துவங்கப்படும்,' என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ரயில்வே பணிகள் தாமதமானால் யாருக்கு என்ன நட்டம். DMK 14 வருடங்களாக அங்கம் வகிக்கும் மத்திய அரசாங்கம் நல்ல முறையில் தமிழ் நாட்டு பணிகளை செய்து வருவது இதிலிருந்து வெட்ட வெளிச்சமாகிறது. இத்திட்டத்தில் பாலக்காடு, கோவை,பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், மதுரை MP க்களுக்கு சம்பந்தம் உள்ளது. அவர்களுக்கு ரயில் வந்தால் என்ன போனால் என்ன? நம் போன்ற சாதாரண மக்களுக்குத்தான் கவலை. இப்பகுதியில் ரயில் ஓட இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆகலாம். இதில் வேடிக்கை என்னவென்றால் பாதை இல்லாத பகுதியில் புதிய ரயில் விட்டார் மம்தா சென்ற பட்ஜெட்டில். வாழ்க மத்திய அரசின் திட்ட பணிகளின் வேகம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.