CM's birthday function : ADMK cadres start collection | களைகட்டுது முதல்வர் பிறந்த நாள் விழா ஏற்பாடுகள்:வசூல் வேட்டையும் துவக்கம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

களைகட்டுது முதல்வர் பிறந்த நாள் விழா ஏற்பாடுகள்:வசூல் வேட்டையும் துவக்கம்

Updated : பிப் 08, 2013 | Added : பிப் 06, 2013 | கருத்துகள் (51)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
 களைகட்டுது முதல்வர் பிறந்த நாள் விழா ஏற்பாடுகள்:வசூல் வேட்டையும் துவக்கம்,CM's birthday function : ADMK cadres start collection

முதல்வர் ஜெயலலிதாவின், 65வது பிறந்த நாளுக்கான ஏற்பாடுகளை, அ.தி.மு.க.,வினர் தடபுடலாக செய்து வருகின்றனர். பிப். 24ம் தேதி வரும் பிறந்த நாளுக்கு, இப்போதிருந்தே பணிகளைத் துவங்கிவிட்டனர்.

கட்-அவுட், பேனர்கள், அலங்கார வளைவுகளை அமைப்பதற்கு, பிளக்ஸ் பேனர்கள் தயாராகி வருகின்றன. இதுவரை, பயன்படுத்தப்படாத வாசகங்கள், முதல்வராக கடந்த ஒன்றேமுக்கால் ஆண்டில், ஜெயலலிதா செய்த சாதனைகள் ஆகியவை கட்-அவுட், பேனர்களில் இடம்பெற உள்ளன. பிளக்ஸ் பேனர்கள் அச்சடிப்புக்கு, பெருமளவில் ஆர்டர்கள் கிடைத்துள்ளதாக, பிரிண்டிங் பிரஸ் வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.

தடபுடல் ஏற்பாடுகள்:


வாழ்த்து பேனர்களைத் தவிர, கோயில்கள், அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள், மனவளர்ச்சி குன்றியோர் பாதுகாப்பு இல்லங்களில் அன்னதானங்களும், பொதுமக்களுக்கு சிறப்பு விருந்துகளும் அளிக்கி ஏற்பாடு செய்து வருகின்றனர்.கட்சியின் நிர்வாகிகள், அணிகளின் பொறுப்பாளர்கள், ஜெயலலிதா பிறந்தநாள் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். வழக்கமாக, கட்சி நிகழ்வுகள் என்றால், மாநில, மாவட்ட நிர்வாகிகள் கட்டுப்பாட்டில் நடைபெறும்.ஆனால், ஜெயலலிதா பிறந்த தினத்தை, மேல்மட்ட ஆணைகள் எதுவும் இல்லாமல், அந்தந்தப் பகுதி நிர்வாகிகள் தங்கள் விருப்பம் போல், கொண்டாட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

பேனர்களில் எவருடைய புகைப்படமும் இடம்பெறக் கூடாது என்ற கட்சி உத்தரவால், கட்சி நிர்வாகிகளின் போட்டோக்கள் இல்லாமல், பேனர், கட்-அவுட்கள் தயாராகி வருகின்றன.
பேனர் வாசகங்கள்:காவிரி பிரச்னையில் ஜெயலலிதாவின் அணுகுமுறை, லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் வெற்றிபெ பொதுமக்களின் ஆதரவை நாடுவது, மத்திய அரசில் அங்கம் பெற்றுக்கொண்டு, தமிழக அரசுக்கு தி.மு.க., நெருக்கடி கொடுக்கிறது, அதை ஜெயலலிதா எப்படி முறியடிக்கிறார் போன்றவை, பேனர் வாசகங்களில் சிறப்பிடம் பெறுகின்றன.ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை கொண்டாடுவதில், கட்சி நிர்வாகிகள் இடையே கடும் போட்டியும் நிலவுகிறது. கட்சியின் அணித் தலைவர்கள் நேரடியாகவே, இப்போட்டியில் குதித்துள்ளனர். இதற்காக, அணியின் முக்கிய நிர்வாகிகளுக்கு, மறைமுக ஆணைகளையும் பிறப்பித்துள்ளனர். நகரின் முக்கிய பகுதிளில் வாழ்த்துக்களை இப்போத எழுதிவிட்டனர். பல இடங்களை, ரிசர்வ் செய்து, வேறுயாரும் பயன்படுத்தக் கூடாது என்ற எச்சரிக்கையையும் செய்துள்ளனர்.

வசூல் வேட்டை:


முதல்வர் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக, வர்த்தக பிரமுகர்கள், தொழில் அமைப்புகளிடம் வசூல் வேட்டையும் நடப்பதாக கூறப்படுகிறது. தங்களது பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனங்களில், பிறந்தநாள் கொண்டாட்ட செலவுக்காக ஒரு தொகையை வழங்க வேண்டும் என்று நிர்வாகிகள் சிலர் வசூலித்து வருகின்றனர்.உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் சிலர், தங்கள் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளின் உரிமையாளர்களை மிரட்டி, பணம் வசூலிக்கத் துவங்கியுள்ளனர். ஸ்ரீபெரும்புதூர், அம்பத்தூர், சோழவரம், ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்பினர், முதல்வர் பிறந்தநாள் பெயரில் வசூல் வேட்டை நடத்துவதாக கூறப்படுகிறது. சோழவரம் பகுதியில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதி ஒருவர், அமைச்சர் பெயரைச் சொல்லி தொழிற்சாலை உரிமையாளர்களை மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
p.saravanan - tirupur,இந்தியா
08-பிப்-201316:32:13 IST Report Abuse
p.saravanan மனமெல்லாம் செண்பக பூ வானெல்லாம் குங்கும பூ தென்பொதிகை காற்றினிலே செந்தாழம் பூ நல்லவர்கள் வாழ்க்கை கெல்லாம் சாமி தானே காப்பு நாமெல்லாம் தெய்வ படைப்பு. தமிழக முதல்வருக்கு தாழ்மையான பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரியபடுத்தி கொள்கிறேன் .
Rate this:
Share this comment
Cancel
Rocket Raja - Pondicherry,இந்தியா
08-பிப்-201301:24:27 IST Report Abuse
Rocket Raja Guys Gotta understand that Tamil Nadu people are so frustrated One thing that is similiar to people in Tamil Nadu and England are that both bear the intolrence metted against them and remain silent and when it comes to Election, they would show their protest in Democratic way by throwing these parties outta office. People are so furstrated and agitated at ADMK's regime. Especially the manner in which they handled the Power Issue and Price Rise. Though DMK made lots of money in their last regime, they never taxed people to such extent. Everyone knows about Jayalalitha. Her only aga is to remain in power and Boss around. Now, she is eyeing to become Deputy Prime Minister with Modi Crowning as Prime Minister, If either of the thing happens then "God cannot save India" No Jobs, No new industries, No power, Price rise of comodities, Rowdism - both Rowdy's as well as Police Rowdism are unbearable. People have already decided to vote against ADMK in coming Loksabha Elections
Rate this:
Share this comment
Cancel
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
07-பிப்-201309:43:52 IST Report Abuse
முருகவேல் சண்முகம்.. ///கட்-அவுட், பேனர்கள், அலங்கார வளைவுகளை அமைப்பதற்கு, பிளக்ஸ் பேனர்கள் தயாராகி வருகின்றன. /// உண்மை.. ஏற்கனவே.. அண்ணா சாலையின் பிரதான பகுதியான.. நந்தனம் பகுதியின்.. நடைபாதை முழுமையாக அடைக்கப்பட்டு.. மிக பெரிய பேனர்கள்.. சில நாட்களாக கட்டப்பட்டு வருகிறது... பொதுமக்களுக்கு இது எவ்வளவு பெரிய இடைஞ்சல் அங்கே பயணிக்கும் மக்களுக்கு தான் தெரியும்... ஜெயா வாழ்க.. அவரது புகழ் ஓங்குக.. அதோடு எங்களையும் கூட வாழவிடுங்கள்.. அல்லக்கைகளின் அலம்பல் தாங்கமுடியவில்லை.. ஆண்டவா இருந்தால் காப்பாற்று.. எங்களை..
Rate this:
Share this comment
Cancel
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
07-பிப்-201309:38:50 IST Report Abuse
முருகவேல் சண்முகம்.. ///சோழவரம் பகுதியில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதி ஒருவர், அமைச்சர் பெயரைச் சொல்லி தொழிற்சாலை உரிமையாளர்களை மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது./// உண்மை.. அமைச்சர் ரமணா தானே.. உண்மை தான்.. இவர் இதற்க்கு மட்டுமல்ல.. இன்னும் பிற விசயங்களில்...அரசு அதிகாரிகளை வைத்து.. அங்கே அந்த பகுதியில். தொழிற்சாலை, வியாபராம் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்பவர்களிடம்.. மிரட்டி வசூலுடன்.. இன்னும் இன்னும்.. வேண்டாம் மேலான விவரங்கள்.. இதை என் கண்ணால் பார்த்தேன்.. இது தான் லட்சணம்...
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
07-பிப்-201309:17:52 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் வசூல் ராஜாவின் படத்துக்கு தடை ...ஆனால் அம்மாவின் பிறந்த நாளுக்காய் வசூலா?
Rate this:
Share this comment
Cancel
bellevueindian - newyork,யூ.எஸ்.ஏ
07-பிப்-201308:58:17 IST Report Abuse
bellevueindian இஸ்லாமிய சகோதரகளுக்கு கோரிக்கை இந்த பூனைக்கு யார் மணி கட்டுவது போன்று குழம்பிய விஷயத்திற்கு நீங்கள் ஒற்றுமையாய் கோரிய கோரிக்கை அதனால் அரசின் முன் மாதிரி முடிவு எடுக்க வைத்ததிற்கு மிக்க நன்றி. உங்கள் மீது உங்கள் அன்பு இந்து சகோதரனுக்கு ஒரு சிறிய வருத்தம், அது என்னவென்றால், நீங்கள் விஸ்வரூப படக்காட்சிகளை நீக்க சொல்லும் போதே, இஸ்லாமிய கதை நாயகன் இந்துக்களை புண்படுத்தும் காட்சிகளை இஸ்லாம் அங்கீகரிக்காது என்று சொல்லி நீக்க கோரியிருக்க வேண்டும் பரவாயில்லை விடுங்கள். நாம் இனி வரும் காலங்களில் ஒற்றுமையுடன் இருந்து இரு மத சம்மந்தப்பட்ட புண்படுத்தும் காட்சிகளை நீக்க கோருவோம், நம் இரு அமைப்பும் இனைந்து கோரிக்கை விடுத்தால் போராட்டம் நடத்தினால் , 8 காட்சி என்ன 16 காட்சி வரை நீக்க கோரலாம். நம இரு அமைப்பும் இனைந்து சமுதாய பணியாற வேண்டியது நிறைய உள்ளது, நீங்கள் கமல் பேட்டியை பார்த்திருப்பீர்கள், அவர் பேட்டியில், இஸ்லாமிய சகோதரகளுக்கு ஒரு விஷயத்தை சொன்னார், அதாவது அவர் எதையும் கற்பனையாக எடுக்க வில்லையாம், அப்கானிஸ்தான் தீவிரவாதத்தை பற்றி யூ-டியுப் இல் இருப்பதை வைத்து தான் எடுத்தாராம். இதற்கெல்லாம் என்ன காரணம்? இந்த யூ-டியுப் தான், இந்த யூ-டியுப் மூலம் நம் இரு மதமும் புண் பட்டு போயுள்ளது, கருமம் கத்தரிக்காய் வெட்டுவது முதல் தீவிரவாதி தலை வெட்டுவதை வரை எதற்கும் வரை முறை இல்லாமல் போட்டு விடுகின்றனர், இவ்வளவு ஏன் எங்கள் மதத்திநரை புண்படுத்தும் விதமாக, எங்கள் நித்தியானந்தாவை கிண்டலடித்து எத்தனை வீடியோக்கள், இவற்றிக்கெல்லாம் உச்சமாய், நித்தியானந்தா அவர் சிஷ்யை ரஞ்சிதாவிற்கு சிறப்பு யோகா கற்று கற்றுகொடுக்கும் காட்சிகளை எல்லாம் காமம் என்ற பெயரில் கொச்சை படுத்தி போட்டுவிகின்றனர், இவற்றை நாம் எதிர்க்க நம் இரு அமைப்பும் இந்த யூ-டியுப் கலாசாரிக்கு எதிராக போராடுவோம். வாழ்க நம் ஒற்றுமை. வாழ்க கருத்து சுதந்திரம்
Rate this:
Share this comment
Cancel
bellevueindian - newyork,யூ.எஸ்.ஏ
07-பிப்-201308:57:58 IST Report Abuse
bellevueindian மத்திய அரசாங்கதிற்கும் தணிகை துறைக்கும் எங்கள் அன்பான கோரிக்கை நம் நாட்டில் சட்டத்தை மதிக்கும் குடிமக்கள், கருத்து சுதந்திரம் உண்டு என்று நினைத்டுகொண்டிர்கிரார்கள், அவர்கள் தணிக்கை குழு அனுமதித்த படத்தை தடை செய்வது, அவற்றை கோர்ட்க்கு வெளியே பேசி தீர்ப்பது போன்ற விஷயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர், சட்டத்தை மீறி எல்லாம் நடக்கிறது என்கிற அவர்களின் வருத்ததை போக்குவது நம் கடமை. அதனால் எல்லாம் சட்டப்படி தான் நடக்கிறது என்ற நில்லைக்கு நாம் மாற்ற வேண்டும். அதனால் அவர் அவர் மத விருப்படி காட்சிகளை வெட்டுவதை சட்ட பூர்வமானதாக அறிவிக்க வேண்டும். தற்போது CBFC (Central Board of Film Certification) எனும் அமைப்பு உள்ளது, அத்துடன், HBFC (Hindu Board of Film Certification) மற்றும் MBFC (Muslim Board of Film Certification) என்னும் அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும், எங்கள் ஹிந்து பிரதிநதிகள் HBFC இல் அங்கம் வகிப்பார்கள், நமது இஸ்லாமிய சகோதரர்கள் MBFC யில் அங்கம் வகிப்பார்கள். CBFC அமைப்பு அவர்கள் அலகுபடி தணிக்கை செய்து தேவையற்ற காட்சிகளை வெட்டிவிட்டு, மீத படத்தை MBFC மற்றும் HBFC கும் கொடுப்பார்கள், நாங்கள் தத்தம் மதங்களை புண்படுத்தும் காட்சிகளை நீக்கிவிட்டு மீதம் (இருந்தால்) காட்சிகளை தயாரிப்பாளரிடம் கொடுத்துவிடுவோம், அவர் திரையரங்கில் வெளியிட்டு கொள்ளலாம். இக்கோரிக்கையை பரிவுடன் மத்திய அரசு ஏற்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
alriyath - Hongkong,சீனா
07-பிப்-201308:52:23 IST Report Abuse
alriyath விளம்பரத்துக்கு ஒரு அளவே இல்ல. இதுல பலமுறை ஆட்சி செய்த அரசியல் கட்சிகளும் விதிவிலக்கில்லை என்பதுதான் படு வேதனை..
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
07-பிப்-201307:33:22 IST Report Abuse
jagan அப்போ கமல் கிட்ட வசூல் பண்ணினது?
Rate this:
Share this comment
Cancel
Ponthangam - Singapore,சிங்கப்பூர்
07-பிப்-201306:30:44 IST Report Abuse
Ponthangam வசூல் வேட்டை இந்த வார்த்தை கலைஞர் குடுமபத்துக்கு மட்டுமே சொந்தம் என்பது தினமலருக்கு தெரியாதா, பார்த்து உங்கள் மீது இந்த வார்த்தையை உபயோக படுத்தியதற்காக trade மார்க் சட்டத்தின் கீழ் வழக்கு பதிய போகிறார்கள்
Rate this:
Share this comment
villupuram jeevithan - villupuram,இந்தியா
07-பிப்-201309:10:59 IST Report Abuse
villupuram jeevithanவர இருக்கும் தேர்தலுக்கு நிதியாக எங்கள் மாவட்டத்தில் ஒரே நாளில் நாற்பது லட்சம் வசூலித்து விட்டார்களாமே திமுக?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை