தமிழகத்தில், 14 மாவட்டங்களில், பெண் குழந்தை எண்ணிக்கை குறைந்து வருகிறது. 1,000 ஆண்களுக்கு, 900 பெண்கள் என்ற அளவில் குறைந்துள்ளதாக, ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கடந்த, 2000ம் ஆண்டில், 2015க்குள் எட்டப்பட வேண்டிய நாட்டின் தேவைகள் குறித்து, பட்டியலிடப்பட்டது. இதற்கு, "புத்தாயிரம் வளர்ச்சி இலக்குகள்' என, பெயரிடப்பட்டது.
இந்த இலக்குகளை அடைவதற்கு, மத்திய, மாநில அரசுகள் எந்த வகையில் செயல்பட்டு வருகின்றன என்பது குறித்து, இளங்குழந்தைகள் உரிமை பேணும் நிறுவனம், பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டது. அதில், குழந்தை பாலின விகிதம் குறித்து சிறப்பு ஆய்வு நடத்தப்பட்டது.
ஆய்வில் கண்டறியப்பட்டவை:
* பல தலைமுறைகளாக, நம் நாட்டில், பெண் பாலின குழந்தை விகிதம் குறைந்துள்ளது. புள்ளி விபரங்களின் அடிப்படையில் பார்த்தால், 1991ம் ஆண்டு, 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 945 பெண் குழந்தைகள் பிறந்தன. 2001ம் ஆண்டு, பெண் குழந்தைகள் எண்ணிக்கை, 914 ஆக குறைந்தது.
* தமிழகத்தில், குழந்தை பாலின விகிதம் உற்சாகமளிப்பதாக இல்லை. அரசின் கணக்கீடுகள், குறுகிய காலத்தை மட்டும் அடிப்படையாக கொண்டவை. கருவுறும் முன் மற்றும் கருவுறுதலுக்கு பின், பரிசோதனை நுணுக்கங்கள் (முறைப்படுத்துதல் மற்றும் தவறாக பயன்படுத்துவதை தடுத்தல்) சட்டம் - 1994 மற்றும் மருத்துவக் கருக்கலைப்பு சட்டம் - 1971 ஆகியவை அமல்படுத்தப்படவே இல்லை.
* தமிழகத்தில், கருவுற்ற பெண்களை பதிவு செய்வதற்கும், பாதுகாப்பதற்குமான மையங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அரசில் பதிவு செய்யப்பட்டுள்ள மருத்துவமனைகளின் எண்ணிக்கை வெறும், 4560 மட்டுமே. இப்பிரச்னையில், ஆவண பராமரிப்பும் சிறப்பாக நடைமுறைப்படுத்தவில்லை.
* தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட தொட்டில் குழந்தை திட்டம், பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் ஆகியவை பிரச்னையின் தீவிரத்தை குறைப்பதை விட, சமத்துவமற்ற நிலையை உண்டாக்கியுள்ளன.
*தமிழகத்தில், 14 மாவட்டங்களில் குழந்தை பாலின விகிதம், 1,000 ஆண்களுக்கு, 900 பெண்கள் என்ற நிலை அதிர்ச்சியூட்டுவதாகவும், கவலை அளிப்பதாகவும் அமைந்துள்ளது.
* குடும்பத்திற்குள்ளேயே, பாலின வேறுபாடு காணப்படுகிறது. எனவே, குழந்தை உரிமையின் பல்வேறு நிலைகளான, வாழ்வுரிமை வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் பங்கேற்பு ஆகியவற்றில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டுமென, ஆய்வில் தெரிய வந்துள்ளது.
* உயர் கல்வி படிக்க வைப்பதற்கு, ஆண் குழந்தைகளே வேண்டும் என, மக்கள் விரும்புகின்றனர். இதனால், பெண் குழந்தைகள் படிப்பை நிறுத்தி விட்டு, குழந்தை தொழிலாளர்களாக மாறி விடுகின்றனர்.
* 3,000 பெண் குழந்தைகள் உள்ள கிராமத்தில், 10ம் வகுப்பு படிக்க வைக்கப்பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை, வெறும், 3 மட்டுமே.
* பெண்களுக்கு கூலித்தொகை வழங்குவதிலும் பாகுபாடு நீடிக்கிறது.
* பெண் குழந்தைகளை கருக்கலைப்பு செய்து அழித்து விடுதால், குழந்தை பாலின விகிதம் குறைந்து வருகிறது.இவ்வாறு ஆய்வில் தெரியவந்துள்ளது.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
பிறக்கும் குழந்தை ஆண் அல்லது பெண் என்பதை நிர்ணயிப்பது X/Y Chromosomes. இதில் பெண் குழந்தை பிறக்க தேவைபடுவது வலுவான விந்து. தற்பொழுது உள்ள உணவு பழக்கங்களால் உடல் வலிமை குறைந்து வலிமை குறைந்து வரும் காலத்தில், பெண் குழந்தை உருவாக காரணமான விந்துவின் அளவும் குறைந்து வருகிறது. விகிதாசாரம் குறைவாக இருப்பதற்கு காரணம், சிசு கொலை மட்டும் அல்ல.
இன்று காலையில் சென்னையில் ஒரு திருமணத்தில் திருப்பூர் நண்பர் ஒருவரை சந்தித்தேன். அவரது மகனுக்கு பல இடங்களிலும் பெண் பார்த்தும் சரியாக அமையவில்லை என்றார். இன்னொரு தகவலையும் சொன்னார். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பலர், சொத்து விவர ஆவணங்களுடன் கேரளா சென்று, குடும்பம், இனம் பார்த்து திருமணங்களை முடித்து கொண்டு வருவதாதாகவும், சிலர் திருமணம் ஆகவில்லையே என்று ஆதங்கத்தில், ஆசையிருந்தும், ஊர் உலகத்திற்கு அச்சப்பட்டு, ஆசையை அடக்கிக்கொண்டு, கேரளா சென்று பெண் தேடும் துணிவு வராமல் இருப்பதாகவும், தங்கள் ஊரில் யாரேனும் பூனைக்கு மணி கட்டினால், பெண் கிடைக்காதவர்கள் கேரளாவிற்கு படையெடுக்க ஆரம்பித்து விடுவார்கள் என்றும் கூறினார். இது ஏதோ படிக்க ஆர்வமாக இருக்கும் என்பதற்காக எழுதுவது அல்ல. உண்மை நிலையை படம் பிடித்து காட்டுவதற்காகவே எழுதுகிறேன். எப்படியோ, சிலப்பதிகார தமிழகம் மலர்ந்தால் சரி.
90% பெண்கள் எல்லோருமே, தாங்களும் ஒரு பெண்தான் என்பதை மறந்து ஆண்குழந்தை மோகத்திலிருப்பதால், பெண்கள் பிறப்பதை அவர்கள் விரும்புவதில்லை. ஒருவேளை பல பெண்கள் தாங்கள் படும் கஷ்டங்களையும், வேதனைகளையும் தனக்கு பிறக்கும் பெண்ணும் படக்கூடதென்ற எண்ணத்தில் கூட பெண்குழந்தையாயிருந்தால், எப்படியாவது டாக்டரிடம் கேட்டும், அல்லது நாட்டு மருந்துகளின் உதவியில் மருத்துவச்சிகளின் மூலமும் கருக்கலைப்பு செய்துகொள்கிறார்கள். இதனால் தான் பெண்களின் பிறப்பு விகிதம் குறைகிறது. தற்போது இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் திருமணத்திற்கு காத்திருக்கும் ஆண்களுக்கு, மணப்பெண்கள் கிடைக்காத நிலையே உள்ளது.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.