"விஸ்வரூபமாகும்' மதுரை தி.மு.க., உட்கட்சி பூசல்: அச்சத்தில் நிர்வாகிகள்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

மதுரை, தி.மு.க.,வில், உட்கட்சி பூசல் விஸ்வரூபம்எடுத்துள்ளதாக, அக்கட்சி நிர்வாகிகள் அச்சத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் உச்சகட்டமாக, மதுரை மாவட்ட, தி.மு.க.,வில் தான், நிர்வாகிகள் இரு கோஷ்டிகளாக பிரிந்து கிடக்கின்றனர். இங்கு, மத்திய அமைச்சர் அழகிரி ஆதரவாளர்கள், அதிக அளவில் ஆதிக்கம் செலுத்துபவர்களாக உள்ளனர்.மற்றொரு தரப்பு, அடங்கியே உள்ளது. இதனால், அழகிரிக்கு நம்பிக்கைக்கு உரியவர்களாக யார் மாறுவது என்பதில், கட்சி நிர்வாகிகளுக்குள், கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.இது தான், உட்கட்சி பூசல்களும் பஞ்சமில்லாமல், மதுரை, தி.மு.க.,வில், "காட்சிகள்' அரங்கேறி வருகின்றன. இதை கட்சி தலைமையும் கண்டு கொள்வதில்லை என, மூத்த தி.மு.க., நிர்வாகிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.அழகிரியிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட, "பொட்டு' சுரேஷ், கட்சி நிர்வாகிகள் முதல், ஐ.பி.எஸ்., - ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் வட்டங்கள் வரை, தனிப்பட்ட ஆதிக்கம் செலுத்தினார். இதை நேரடியாக பார்த்த கட்சியினருக்கு, "பொட்டு' சுரேஷ் இடத்தை பிடித்து விட்டால், நாமும் அவ்வாறு வலம் வரலாம் என்ற எண்ணம், பலர் மனதில் துளிர் விட்டது.

இதன் காரணமாகவே, மதுரை தி.மு.க.,வில் பலரும், "தடியெடுத்த தண்டல்காரர்களாக' மாறுகின்றனர். இதில் முதல் இடத்தில் இருப்பவர் தான், "பொட்டு' சுரேஷ் கொலையில் சந்தேகப்படும், "அட்டாக்' பாண்டி என்கிறது, போலீஸ்.அழகிரியிடம் நிர்வாகிகள் யாரையும் நெருங்க விடவில்லை, "பொட்டு' சுரேஷ். எந்த, "கான்ட்ராக்ட்டும்' சுரேஷ், "கை' காட்டுபவர்களுக்கு தான் வழங்கப்பட்டன. இதுவும் பல நிர்வாகிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

அந்த நிலையில் தான், "பொட்டு' சுரேஷ் வீட்டில், பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை, போலீசார் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.
அழகிரியிடம், தி.மு.க., நகர் செயலர் தளபதி, நெருக்கத்தில் இருந்தார். ஆனால், ஒரு கட்டத்தில் அவரையும், சில நிர்வாகிகள், "கட்டம் கட்டி' ஒதுக்கி விட்டனர். இதன் பின், மதுரை, தி.மு.க., வில், "பொட்டு' சுரேஷ், "அட்டாக்' பாண்டி தரப்புக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இப்பிரச்னை, கட்சி தலைமை வரை எடுத்துச் சென்றும், முடிவுக்கு வரவில்லை.

இதற்கிடையே, சென்னையில், ஸ்டாலினை சந்தித்த, "அட்டாக்' பாண்டி, அழகிரி வட்டார ஆதரவாளர்களை விமர்சனம் செய்ததும், மதுரை நிர்வாகிகள் சிலருக்கு, அதிருப்தியை ஏற்படுத்தியது.தலைமை அறிவிக்கும் ஆர்ப்பாட்டம் கூட, மதுரையில் ஒற்றுமையாக நடத்த முடியாத நிலையில், கோஷ்டி பூசல்கள் ஏற்பட்டு, தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தி வந்த நிலையில், "பொட்டு' சுரேஷ் கொலையும் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:கட்சியில் இவருடன் இருப்பதா, அவருடன் இருப்பதா என்பதே, மதுரை நிர்வாகிகளுக்கு குழப்பமாக உள்ளது. இந்த கோஷ்டி பூசல்கள், நிர்வாகிகளை, வேதனையில் ஆழ்த்தியுள்ளன. தற்போது, மதுரை கட்சி நிலைமையை பார்க்கும்போது, எங்களுக்கு பயமாக இருக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (13)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ponthangam - Singapore,சிங்கப்பூர்
07-பிப்-201306:34:42 IST Report Abuse
Ponthangam அண்ணன் அஞ்சா நெஞ்சன் இருக்கும் போது எதற்கு இந்த பூசல் ஈசல் எல்லாம் வர போகிறது. அடுத்து ஒரு மர்டர் மாரிமுத்தோ அல்லது கில்லர் கிருஷ்ணனோ அதுவும் இல்லாட்டி ஒரு நாய் சேகரோ கிடைக்கவா மாட்டான்
Rate this:
Share this comment
Cancel
jayabalan - chennai ,இந்தியா
07-பிப்-201306:17:36 IST Report Abuse
jayabalan குடும்ப உறுப்பினர் யாவரும் அடிப்படை உறுப்பினராக மட்டுமே இருப்பார்கள் என டிக்ளர் செய்து விட்டு பொதுக் குழுவைக் கூட்டி சீனியர்மோஸ்ட் உறுப்பினரை தலைவராக நியமிக்கலாம் கட்சி பினிக்ஸ் ஆகும்
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
07-பிப்-201306:10:05 IST Report Abuse
villupuram jeevithan அவசியம் இல்லாத, முக்கியமில்லாத விஷயம் இது.
Rate this:
Share this comment
Cancel
Guru - Batam,இந்தோனேசியா
07-பிப்-201305:36:35 IST Report Abuse
Guru குட்டைய கலக்கி மீன் பிடிப்பதில் வல்லவரான தலிவராலேயே ஒன்னும் பண்ண முடியலையா?
Rate this:
Share this comment
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
07-பிப்-201303:26:05 IST Report Abuse
s.maria alphonse pandian அழிகிரி எல்லாவற்றையும் விட்டு விட்டு, தான் உண்டு..தன வேலையுண்டு என இருக்கும்போது, இது போன்ற செய்திகள் வெறுமெனே உசுப்பேத்தும் செய்திகளே......ஊஹ செய்திகளுக்கா பஞ்சம் ?
Rate this:
Share this comment
Cancel
குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா
07-பிப்-201303:22:27 IST Report Abuse
குஞ்சுமணி சென்னை ஆளுங்கட்சி எதிர் கட்சியா இல்லாட்டியும் தி.மு.க வ பத்தி தான் தினமும் நியுஸ் வருது
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
07-பிப்-201303:16:29 IST Report Abuse
தமிழ்வேல் அப்போ .... இன்னும் 2,3 தலை உருளும் போல தெரிகின்றது...அதுக்கு முன்னாலேயே உள்ளே தள்ளனும்...
Rate this:
Share this comment
Cancel
Vettri - Coimbatore,இந்தியா
07-பிப்-201302:01:30 IST Report Abuse
Vettri பொட்டு சுரேஷ் மாதிரி அதிகாரம் வேண்டும் என்று விரும்புபவர்கள் அதனால் ஏற்படும் முடிவையும் சிறிது சிந்தித்து பாருங்கள்.
Rate this:
Share this comment
Cancel
செந்தமிழ் கார்த்திக் - NamakkaL to ChennaI,இந்தியா
07-பிப்-201300:57:11 IST Report Abuse
செந்தமிழ் கார்த்திக் ஷப்பா இப்பவே கண்ண கட்டுதே. நான் பிளாட்டோவில் இருந்து அரிஸ்டாட்டில் , மேக்கவேல்லி , கார்ல் மார்க்ஸ் , வழியாக சாணக்கியர் , ராஜாராம் மோகன் ராய் , காந்தி, நேரு , பெரியார் , அண்ணா , எம்ஜி ஆர் என்று முறைப்படி அரசியலை படித்து பார்த்து வருகிறேன்.. ஆனால் இவர்கள் ?? பணமும் , அடியாட்களும் இருந்தால் அரசியல்வாதிகள் ஆகி விடுகிறார்கள் ?? இவர்களை சொல்லி தவறில்லை , அவர்களை தேர்ந்தெடுக்கும் நம்மை தான் குற்றம் சொல்ல வேண்டும் , இந்த மாதிரியான ஆட்களை கட்சியில் சேர்க்கும் கட்சியையும் , அதன் தலைவனையும் மக்கள் கவனிக்க வேண்டும்.. சமுதாயத்தில் அழுத்தமான ஆழமான சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும் போல தோன்றுகிறது.. அரசியல் என்பதை சமூக தொண்டு என்ற நிலை மாறி இன்று வியாபாரம் என்ற நிலைக்கு தள்ள பட்டுள்ளது .. இப்படி இருந்தால் பிறகு எப்படி சிங்கப்பூர், சீனா, அமெரிக்கா , ஐரோப்பா நாடுகளின் வளர்ச்சியுடன் போட்டி போட முடியும் ??? தவறு அடித்தளத்தில் இருக்கிறது ... நல்ல தலைவனை தேர்ந்து எடுக்காமல் தவறி வருவதே அதற்கான காரணம்... இந்த சண்டைகள் , சச்சரவுகளுக்கு எல்லாம் பொறுப்பு கட்சி தலைமை தான்...
Rate this:
Share this comment
arivaali - chennai,இந்தியா
07-பிப்-201305:49:42 IST Report Abuse
arivaaliஉங்கள் கருத்துக்கள் எல்லாம் மிகச் சிறப்பாக உள்ளன. இந்தியாவின் விடியலுக்கு ஒரே வழி, நாட்டின் தலைவரை நேரடியாக குறைந்தது 51% வாக்குகளுடன் தேர்ந்தேடுக்கும்படியான ஒரு அறிவார்ந்த அரசியல் சட்டம் ஒன்றுதான். அல்லது அடுத்த தேர்தலில் மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப் படவேண்டும். இல்லை என்றால் ராகுல் காந்தி என்னும் போர்வையில் உள்ள இத்தாலியன் Raul Vinci யும் முலாயமும் மாயாவதியும் கருணாநிதியும் தான் பிணம் தின்ன பறந்துகொண்டிருப்பார்கள்...
Rate this:
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
07-பிப்-201300:36:57 IST Report Abuse
Thangairaja ரவுடிகள் எந்த கட்சியில் இருந்தாலும், எந்த கோஷ்டியில் இருந்தாலும் நிராகரிக்க பட வேண்டியது முக்கியம். இவர்களுக்கு ஆதரவு கொடுப்பவர்களால் ஏற்படும் நெருக்கடியை கட்சிகள் புறந்தள்ள வேண்டும். எல்லா கட்சிகளுக்குமே இது பொருந்தும்.
Rate this:
Share this comment
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
07-பிப்-201306:56:01 IST Report Abuse
Baskaran Kasimaniஅப்படியென்றால் கட்சியை கலைக்கச்சொல்கிறீரா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்