சட்டசபையில் கதைகளுக்கு இனி பஞ்சமிருக்காது!

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

தமிழக சட்டசபையில், கதை சொல்லி, முதல்வரிடம் நல்ல பெயர் வாங்க, எம்.எல்.ஏ.,க் கள், "வேட்டியை மடிச்சு கட்டி' வேலை பார்க்கின்றனர்.

தமிழக சட்டசபை, கடந்த, 1ம் தேதி கூடியது. முதல் மூன்று நாட்கள், கவர்னர் உரை, இறந்த தலைவர்களுக்கு இரங்கல் எனச் சென்றது. நான்காம் நாளான நேற்று முன்தினம், சட்டசபையில், திடீரென ஒரு உறுப்பினர் கதை சொல்லத் துவங்கினார்.

தே.மு.தி.க., தலைவரும், ரிஷிவந்தியம் தொகுதி, எம்.எல்.ஏ.,வுமான விஜயகாந்தை, "குரூப் கேப்டன்' என, பெயரிட்டு, அ.தி.மு.க., எம்.எல்.ஏ., விஜயபாஸ்கர் பேசுகையில், ஒரு குட்டிக் கதையைக் கூறினார்.இதை எல்லா உறுப்பினர்களும் கூர்ந்து கேட்டனர். முதல்வர் ஜெயலலிதாவும் இக்கதையை ஆர்வமாகக் கேட்டார். இறுதியில், "உன்னைப் பார்த்து, உலகம் சிரிக்கிறது; உன்னைப் பார்த்து, உன் நிழலும் வெறுக்கிறது' என, எம்.ஜி.ஆர்., பாடலையும், நினைவுபடுத்தினார்.இவர் பேச்சை, முதல்வர் ஜெயலலிதா, நன்கு ரசித்துச் சிரித்ததால், "ஆஹா... இவர் வழி, நல்ல வழியா இருக்கே... இனி நாமும், கதையும், வசனமுமாக, "அவிழ்த்து' விட்டு, நல்ல பெயர் வாங்க வேண்டும்' என, சபையை விட்டு வெளியே வருவதற்கு முன்பாகவே, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், தீர்மானம் செய்து கொண்டனர்.

சபை முடிந்ததும், சினிமா கதாசியர்கள், வசனகர்த்தாக்களுக்கு, "போன்' பறந்தது. ஒரே நாளில், அதிர்ஷ்டக் காற்று வீசியதைக் கண்டு, அவர்களும், நேற்று திக்குமுக்காடினர்.பழைய திரைப்படங்களின் பாடல்கள், வசனங்கள் அடங்கிய புத்தகங்கள் விற்கப்படும் கடை, "போன்' எண்களையும், தேடிக் கண்டுபிடிக்க, எம்.எல்.ஏ.,க்கள் ஆர்வம் காட்டுகின்றனர். குட்டிக் கதைகள், தெனாலி ராமன் கதைகள், நீதிக் கதைகள், கற்பனைக் கதைகள் என, அனைத்து விதமான கதைப் புத்தகங்களும், எங்கெங்கே கிடைக்கின்றன என, விசாரிக்கின்றனர்.திரைப்பட வசனகர்த்தாக்களின் காட்டில் மழை தான் என்றளவுக்கு, அவர்களை வரவழைத்து, பிரியாணி, உற்சாக பானம் கொடுத்து, உருவி உருவி கதைகளைக் கேட்கின்றனர். இவர்கள் கதையைச் சொல்ல, எம்.எல்.ஏ.,க்கள், "பாயின்ட்'டுகள் எடுத்துச் சொல்ல என, இவர்களின் கதை, வெகு சுவாரசியமாக ஓடுகிறது.

சில எம்.எல்.ஏ.,க்கள், ஓட்டல்களில் அறை எடுத்து, "டிஸ்கஷனில்' ஈடுபடும் அளவுக்கு, கதைகளுக்கு மவுசு ஏற்பட்டு விட்டது.சில, எம்.எல்.ஏ.,க்களோ, வெளியில் விஷயம் தெரிந்தால், கிண்டல் அடிப்பர் எனக் கருதி, வீட்டிலேயே, வசனகர்த்தாக்களை வரவழைத்து, வேட்டியை மடித்துக் கட்டி, கோழி பிரியாணி சமைத்துக் கொடுத்து, கதை கேட்கின்றனர்.இனி வரும் காலங்களில், சட்ட சபையில், விவாதம் நடக்கிறதோ இல்லையோ, கதைகள் கண்டிப்பாய் கட்டியம் கட்டும் என்பதில் சந்தேகம் இல்லை!

- நமது நிருபர் -

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (147)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dori dori domakku dori - nisova,மான்ட்செரட்
08-பிப்-201300:17:06 IST Report Abuse
dori dori domakku dori கூமாண்டுர் என்ற ஊரில் குப்பன், சுப்பன் என்ற இருவர் வாழ்ந்து வந்தனர் . இதில் குப்பன் உழைப்பதில் நாட்டம் கொண்டவன். ஆனால் சுப்பனோ நேரம் வரும் வரை பொறுப்போம் என்ற கொள்கை கொண்டவன். இருவருமே பயிருட்டு பிழைத்து வந்தனர். ஒரு சமயம் தேவலோகத்தில் வருணன் இந்திரனிடம் சென்று எனக்கு 10 வருடம் விடுமுறை வேண்டும் என்று கேட்டான், அதற்க்கு உடன்படாத இந்திரனை வருணன் சரிகட்டி விடுமுறை பெற்றான். ஆனால் இந்திரனோ 10 வருடம் மழை கிடையாது என்பதனை உலகத்தோருக்கு, ஊர் சுற்றும் நாரதரை கொண்டு அறிவித்து விட்டான் . உலக மக்கள் அனைவரும் உழவே செய்யவில்லை. சுப்பனும் இவர்களுடன் சேர்ந்துகொண்டு வாளா இருந்துவிட்டான். இப்படியே 1 வருடம் கழிந்து விட்டது. வழக்கம்போல் நாரதர் சுற்றி வரும்போது கூமான்டூரில் குப்பன் வயலை உழுதுகொண்டிருந்தான் . அதிசயப்பட்டு ஆச்சர்யத்தின் விளிம்பிருக்கு சென்ற நாரதர் அவனை "குப்பா" வருணன் விடுமுறை வாங்கிய விஷயம் தெரியுமா என கேள்வி எழுப்பினார் ???? உடனே குப்பன் தெரியும் மகரிஷி என்றான் . உடனே நம் கழக ரிஷியும் எதற்கு இந்த வீண் வேலை "கூமான்டூர் " சுப்பனை பார் என்றார் .... அதற்கு நம் குப்பனோ மழை வராது தெரியும். ஆனால் எர்பிடிதல் மறந்தால் 10 வருடத்திருக்கு பின் மழை பெய்யும்போது வீணாகிவிடுமே என்று சொல்ல .... இதனை மறைந்து நின்று பார்த்த வருணன் , இந்திரன் , கூமான்டூர் சுப்பன் வெட்கி தலை குனிந்தனர் . வருணனும் லீவை கான்செல் செய்து முன்போல் மழை போழிய தொடங்கினான் .
Rate this:
Share this comment
Cancel
KMP - SIVAKASI ,இந்தியா
07-பிப்-201322:07:57 IST Report Abuse
KMP மோசமான செய்தி இது.. மக்கள் பிரச்சனை பற்றி பேசாமல் கதை சொல்வது, எதிர்கட்சிகளை விமர்சிப்பது (என்னமோ இவர்கள் யோக்கியம் போல), இவர்களால் எல்லாம் வீண் தான் ?
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
07-பிப்-201321:40:48 IST Report Abuse
Pugazh V இந்த அவலங்களை எல்லாம் பார்த்த பின்னும், கஷ்டங்களை அனுபவித்த பின்னும், தி மு க வை இன்னமும் சாடிக் கொண்டும் அ தி மு க வை வாழ்த்திக் கொண்டும் எப்படி சிலரால் இருக்க முடிகிறது? இந்த ஆட்சிக்காகவா வாக்களித்தீர்கள், இனியும் ஆதரிக்கப் போகிறீர்கள்?
Rate this:
Share this comment
Cancel
Mohandhas - singapore,சிங்கப்பூர்
07-பிப்-201318:56:41 IST Report Abuse
Mohandhas இந்த லட்சணத்துல இந்தம்மா டெல்லி முதவர் மாநாட்டுல நேரம் போதலயாம்,,, அங்கும் போய் கத சொல்ல ஆரம்பித்திருப்பார் போல ,,, ஆனா ஒண்ணு பேரன் பேத்தி எடுக்கிற வயசில ஒண்ணு கதைசொல்ல பிடிக்கும். இல்ல கதைகேட்க பிடிக்கும்.....
Rate this:
Share this comment
Cancel
Mohan Ramachandran - Itanagar,இந்தியா
07-பிப்-201318:38:42 IST Report Abuse
Mohan Ramachandran நம்ம பொழைப்பே சந்தி சிரிக்கிறது. இதில் கதை வேறையா
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
07-பிப்-201318:29:58 IST Report Abuse
தமிழ்வேல் வெட்டி கதைய போயி ...குட்டி கதை ன்னு சொல்லிக்கிட்டு...
Rate this:
Share this comment
Cancel
ramaiah - geylong,சிங்கப்பூர்
07-பிப்-201318:16:30 IST Report Abuse
ramaiah உங்களுக்கு ஓட்டுப்போட்டு சட்டசபைல மக்களை பத்தி பேசுங்க. MLA சார்ன்னு சொன்னா நீங்க போய் கதை பேசுவீங்க அதை நாங்க கேட்டு, ரசிக்க நாங்க எல்லாம் உங்க தலைவி அம்மா இல்லைடா கொய்யால .போங்கடா நீங்களும் உங்க அரசியலும் .
Rate this:
Share this comment
Cancel
BED BUG - doha,கத்தார்
07-பிப்-201318:09:50 IST Report Abuse
BED BUG தீப்பொறி ஆறுமுகத்தை m l a ஆக்குங்கள். அவர் இதைவிட சிறப்பான (?) கதைகளை சொல்வார்.
Rate this:
Share this comment
Cancel
Amalraj Penigilapati - Castries,செயின்ட் லூசியா
07-பிப்-201317:45:59 IST Report Abuse
Amalraj Penigilapati எங்க திருபெரும்புதூர் சட்ட மன்ற உறுப்பினர் பெருமாள் பற்றி ஒரு செய்தியும் வருவதில்லையே, அவரது வாகனத்திலோ, வீட்டிலோகூட ஜெயாவின் படம் இருப்பதாக தெரியவில்லை. தினமலர் சற்று ஆராய்ச்சியில் ஈடுபடுமா?
Rate this:
Share this comment
Cancel
சிந்திப்பவன் - chennai,இந்தியா
07-பிப்-201316:41:10 IST Report Abuse
சிந்திப்பவன் வெறுமனே சிரிக்கறதா, வழிச்சுகிட்டு சிரிக்கறதா என்றுதான் தெரியலே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்