ஆசிரியர்களின் திறன் : மன்மோகன் சிங் கவலை
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி:"" நம் நாட்டில், ஆசிரியர்களின் கல்வி போதிக்கும் திறன், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இல்லை. கல்வித் துறையில் உள்ள, முக்கிய பிரச்னைகளுக்கு, உடனடியாக தீர்வு காண வேண்டும்,'' என, பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின், பொன் விழா கொண்டாட்ட விழாவில், பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:பள்ளி படிப்பை, பாதியிலேயே கைவிடுவோரின் எண்ணிக்கையை குறைக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனாலும், பள்ளி படிப்பை, பாதியில் கைவிடுவோரின் எண்ணிக்கை, அதிகமாகவே உள்ளது. இது, மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது.நாட்டின் குடிமகன்கள், தரமான கல்வி கற்றால் மட்டுமே, நாடு, வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்பதை, அரசு உணர்ந்துள்ளது. ஐ.மு., கூட்டணி அரசு, பதவிக்கு வந்ததிலிருந்து, கல்வித் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இத் துறையில், அதிகமான முதலீடு செய்யப்படுகிறது.

சமுதாயத்தின் அடித்தட்டில் உள்ளவர்களும், தரமான கல்வி கற்க வேண்டும். தரமான கல்வி கற்பதற்கு, அவர்களுக்கு, போதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும். நம் நாட்டில், ஆசிரியர்களின் கல்வி கற்பிக்கும் திறன், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இல்லை.
கல்வித் துறையில், இது போன்ற பல்வேறு பிரச்னைகள் உள்ளன. இதற்கு, உடனடியாக தீர்வு காண வேண்டும். தரமான கல்வியை அளிப்பதில், கேந்திரிய வித்யாலயா சிறப்பாக செயல்படுகிறது. இந்த பள்ளிகளில், தங்களுக்கு அருகில் உள்ள, மற்ற பள்ளிகளுக்கு, முன் மாதிரியாக செயல்பட வேண்டும்.இவ்வாறு, மன்மோகன் சிங் பேசினார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஹரிபாஸ்கர் - திருச்சி,இந்தியா
07-பிப்-201307:05:49 IST Report Abuse
ஹரிபாஸ்கர் கைல தட்டு நிறைய சாப்பாடு வச்சிகிட்டு,, அய்யோ பசிக்குது அம்மா பசிக்குதுன்னு சொன்னா மாதிரி இருக்கு உங்க புலம்பல், என்னாங்க மன்ஜி நாங்க தான் சாதாரண செக்கு மாடுகள் (குடிமக்கள்) உங்களையும் உங்க ஆட்சி நிர்வாகத்தையும், இந்தியா நாட்டு நடப்பு, சட்ட திட்டம் யெல்லாம் பாத்து வயிறு எரிஞ்ச்சி சகிச்சுக்க முடியாம தினமலர்ல வந்து கருத்துன்ற பேர்ல அரசியல்வாதிகளை கிழி கிழின்னு கிழிச்சா,,,,நீங்க என்னாடான்னா இங்க வந்து ஒப்பாரி வக்கிறீங்க,
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
07-பிப்-201306:44:42 IST Report Abuse
ஆரூர் ரங ஆசிரியர்களுக்கு இவரை மாதிரி கைகட்டி நிற்கத் தெரியவில்லை
Rate this:
Share this comment
Cancel
jayabalan - chennai ,இந்தியா
07-பிப்-201305:48:44 IST Report Abuse
jayabalan :"" நம் நாட்டில், ஆசிரியர்களின் கல்வி போதிக்கும் திறன், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இல்லை. கல்வித் துறையில் உள்ள, முக்கிய பிரச்னைகளுக்கு, உடனடியாக தீர்வு காண வேண்டும்,'' என, பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். இந்தியா எவ்வளவோ ஏற்றுமதி செய்கிறது. ஏன் ஆசிரியர்களை ஏற்றுமதி செய்ய முடியாது? - மோடி கேள்வி
Rate this:
Share this comment
Cancel
Krishnamoorthi A N - Sathyamangalam,இந்தியா
07-பிப்-201305:44:54 IST Report Abuse
Krishnamoorthi A N சிறந்த பல்கலைக்கழகங்கள் இல்லை, சிறந்த ஆசிரியர்கள் இல்லை, போதுமான நிதி இல்லை, மின் உற்பத்தி இல்லை என்று புலம்பிக்கொண்டே இருங்கள். அவற்றை நீக்க எதையும் செய்யாமல் ஊழலில் மட்டும் சிறந்து விளங்கும் உங்கள் ஆட்சியில் சிறந்த நிர்வாகம் இல்லை என்று மக்கள் தீர்மானித்து உங்களை ஆட்சியில் இருந்து துடைத்தெறியும் காலம் நெருங்கிக்கொண்டுள்ளது என்பதை மறந்து விடாதீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
Guru - Batam,இந்தோனேசியா
07-பிப்-201305:32:37 IST Report Abuse
Guru உங்களோட திறமைய நினச்சா அதவிட ரொம்ப கவலையா இருக்கே
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
07-பிப்-201305:32:27 IST Report Abuse
villupuram jeevithan நீங்கள் ஆசிரியர் திறன் பற்றி கவலைப் படுகிறீர். ஆனால் மக்களோ இந்த நாட்டை ஆளும் பிரதமரின் திறன் இவ்வாறு குறைந்து விட்டது என்று அழுகிறோம். என்ன சொல்ல?
Rate this:
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
07-பிப்-201304:07:19 IST Report Abuse
Baskaran Kasimani இவை எல்லாம் கூடா நட்பினால் வந்தது. மக்கள் படித்தால் எப்படி ஊழல் செய்யமுடியும்?
Rate this:
Share this comment
Cancel
செந்தமிழ் கார்த்திக் - NamakkaL to ChennaI,இந்தியா
07-பிப்-201301:54:47 IST Report Abuse
செந்தமிழ் கார்த்திக் நேற்று சிறந்த பல்கலை கழகங்கள் இல்லை என்று பொலம்பல் .. இன்று சிறந்த ஆசிரியர்கள் இல்லை என்று பொலம்பல் ... அப்படியே நிதி , நீதி , ரயில்வே , அறிவியல் , ஆராய்ச்சி , தொழிநுட்பம் , தொழில் துறை , வேளாண் என்று வரிசையாக ஆய்வு செய்தால் எல்லா துறைகளும் பல்லை காட்டி கொண்டு பலித்து காட்டும்.. அப்போது தான் உங்களுக்கே தெரியும் உங்கள் ஆட்சியின் லட்சணம்.. 50 வருடங்களுக்கு மேலாக ஆண்டு விட்டு , அதிலே நீங்கள் 9 வருடங்களாக ஆண்டுவிட்டு ஆட்சி முடியும் தருவாயில் ஒப்பாரிவைப்பது சகிக்கவில்லை.. மக்கள் செல்வம் குறைவாக உள்ள நாடுகள் எல்லாம் விரைவான அபரிவிதமான வளர்ச்சி, சீனா கூட நம்மை தாண்டி எங்கோ சென்று விட்டனர் , இன்று வந்து அப்படி செய்திருக்கலாம் , இப்படி செய்திருக்கலாம் என்று பஞ்சாங்கம் வாசிக்கிறார் இந்த அடிமை மவுனி பாபா .. மாற்று கருத்தே இல்லை, இனி காலத்துக்கும் காங்கிரேஸ் ஆட்சி இல்லை... குறிப்பாக நீங்கள் இனி பிரதமர் ஆகவே முடியாது.. மன்னிக்கவும் நீங்கள் வெளியுறவு துறை அமைச்சர் தானே ?? இந்திய வரலாற்றில் மிக பெரிய கரும்புள்ளி நீங்கள் தான்... என்ன ஜென்மமடா ???
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
07-பிப்-201301:20:51 IST Report Abuse
Nallavan Nallavan இந்த விடியா மூஞ்சியை எங்கே கூப்பிட்டாலும் அங்கே போய் புலம்பி விடுகிறது .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்