சென்னை:பொது இடத்தில் புகை பிடிப்போரை மடக்கி, அபராதம் விதிப்பதை
தீவிரப்படுத்தவும், சிகரெட், புகையிலை விளம்பர
பலகைகளை, 25ம் தேதி முதல் அகற்றவும்,
மாநகராட்சி முடிவு செய்து உள்ளது.
புகையில் நோய்
பாதிப்புகள், உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில்,"சிகரெட், புகை பொருட்கள் கட்டுப்பாட்டுச் சட்டம்-2003', நாடு முழுவதும் நடைமுறையில் உள்ளது.
சென்னையில், இந்த சட்டத்தின் கீழான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து, சுகாதார அலுவலர்களுக்கான பயிற்சி முகாம், மாநகராட்சி பொன்விழா
அரங்கில் நடந்தது.
இதில், பொது சுகாதாரத் துறை இணை
இயக்குனரும், மாநில புகையிலை கட்டுப்பாட்டு மைய பொறுப்பு அலுவலருமான வடிவேல் பங்கேற்று, ஆலோசனைகள் வழங்கினார்.
பள்ளிகளைச் சுற்றி, 300 அடி தூரத்திற்குள் புகையிலை பொருட்கள் விற்பனை கூடாது.
மக்கள் கூடும் பொது இடங்களில் புகை பிடித்தால், குறைந்த பட்சம், 100 ரூபாயும், அதிகபட்சம், 200 ரூபாய் வரை அபராதம் விதிக்க வேண்டும்.
சிகரெட், புகையிலை தொடர்பாக, மாநகரம் முழுவதும் உள்ள விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும்.
குட்கா விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும். பொது நல நோக்கோடு, புகையிலை தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்
வலியுறுத்தினார்.
தொடர்ந்து, மாநகராட்சி யில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, சுகாதார அலுவலர் தங்கராஜ் மற்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொது இடத்தில் புகை பிடிப்போர், விதிக்கு மாறாக புகை, குட்கா விற்போர் மீதும் நடவடிக்கைகள், மண்டலம் தோறும் உடனடி யாக தீவிரப்படுத்தப்பட உள்ளன.
வரும், 25ம் தேதி முதல், தனிக்குழு அமைத்து, 15 மண்டலங்களிலும் உள்ள, சிகரெட், புகையிலை சார்ந்த விளம்பர பலகைகளை அகற்ற, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
மாநகராட்சி களத்தில் குதிப்பதால், ஊதித்தள்ளும் பழக்கம் உள்ளோர், பொது இடத்தில் புகை பிடிப்பதை தவிர்ப்பதே நல்லது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.