Advertisement
தாத்தாவுக்கு கவியரங்கம்... பேத்திக்கு வீணையரங்கம்!
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Click the button to move down
Advertisement

சென்னை:சட்டசபையில், "டெசோ' குறித்து, அரசு கொறடா வைகைச் செல்வன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபையில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, அரசு கொறடா, வைகைச் செல்வன் பேசியதாவது:
தமிழ்ப் புத்தாண்டு கடந்த ஆட்சியில், சித்திரையில் இருந்து தை மாதத்திற்கு மாற்றப் பட்டது. தமிழ் மாதங்களில், முதலில் இருப்பது சித்திரை,
10வது மாதம் தை. முதல் மாதத்தை விடுத்து, 10வது மாதத்தை முதலில் கொண்டு வந்துள்ளனர். அண்ணன் இருக்க, தம்பிக்கு மகுடம் சூட்டுகின்றனர்.
மேலும், கடந்த காலத்தில், செம்மொழி மாநாடு என, கொடீசியா அரங்கில், 500 கோடிகளை கட்டவிழ்த்து, ஈழத்தின் படுகொலையை மறைக்க, ஒரு நாடகத்தை அம்பலப்படுத்தினர். தமிழுக்கு ஒரு சேவையையும் அவர்கள் செய்யவில்லை.
தாத்தாவிற்கு கவியரங்கம்; பேரனுக்கு பேச்சரங்கம்;பேத்திக்கு வீணையரங்கம்; தம்பிக்கு பவுடர் அரங்கம்; தங்கைக்கு இன்னொரு அரங்கம்.
இலங்கையில், நடந்துள்ள மனித உரிமை மீறல்களை அவர்கள் ஆட்சியில் இருந்த போது தடுத்தார்களா? இலங்கையில் படுகொலை நிகழ்ந்த போது ஏதாவது பேசினார்களா?
செய்த பாவத்திற்கு, தற்போது, "டெசோ' என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர். எப்போதுமே திருடர்கள், "திருடர்கள் ஜாக்கிரதை' என்ற போர்டின் முன்தான் இருப்பர்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு, தி.மு.க.,- எம்,எல்.ஏ.,க்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். விளக்கம் தர வாய்ப்பளிக்க வேண்டும் என்று, சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தனர். சபாநாயகர் மறுத்து, வைகைச் செல்வனை தொடர்ந்து பேசுமாறு கூறினார். இதையடுத்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.
அடுத்ததாக, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., சந்திரகுமார் பேசும் போது, தி.மு.க., எம்.எல்.ஏ.,க் கள் சபைக்குள் வந்தமர்ந்தனர்.
அன்பழகன் வெளியேற்றம்
கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜா பேசும் போது, "தமிழகத்தின் மின் பிரச்னை, கூட்டுறவு கடன்களை, முன்னாள் முதல்வர் கருணாநிதி தள்ளுபடி செய்தது' தொடர்பாக பேசினார்.
இதற்கு, அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ., அன்பழகன் எழுந்து நின்று, தங்களுக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பு தர வேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தினார்.
அப்போது, சபாநாயகரை பார்த்து கையை நீட்டி பேசியதாக கூறி, அவரை, சட்டசபையில் இருந்து வெளியேற்ற, சபைக் காவலர்களுக்கு, சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
சபைக் காவலர்கள், உடனடியாக, அன்பழகனை சபையில் இருந்து வெளியேற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து, தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களும் வெளியேறினர். சபையில், "கன்னிப்பேச்சை' துவக்கிய, ராஜாவும் உரையை முடிக்காமல், வெளியேறினார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.