சென்னை:""இலங்கை அரசு, இலங்கைத் தமிழர்களை கொன்று குவித்தபோது, மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த தி.மு.க., மவுனியாக இருந்தது ஏன்?'' என, பார்வர்டு பிளாக் எம்.எல்.ஏ., கதிரவன் கேள்வி எழுப்பினார்.
சட்டசபையில், அவர் பேசியதாவது:
இலங்கைத் தமிழர்களுக்காக, "டெசோ' கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இலங்கைத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது, மத்தியிலும், மாநிலத்திலும், தி.மு.க., ஆட்சி அதிகாரத்தில் இருந்தது.
அப்போது, இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தாமல், தி.மு.க., மவுனியாக இருந்தது ஏன்? காவிரி தீர்ப்பை, மத்திய அரசிதழில் வெளியிட, தி.மு.க., வலியுறுத்தாதது ஏன்?
பிரின்ஸ்-காங்கிரஸ்: காவிரி தண்ணீரை, தமிழகத்திற்கு திறந்துவிடுங்கள் என, பிரதமர் கூறினார். ஆனால், கர்நாடக அரசு தான் கேட்கவில்லை.
தமிழக மக்கள் மீது அன்பு இல்லாமல், தண்ணீரை திறந்துவிடுங்கள் என, பிரதமர் கூறுவாரா என்பதை, எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
ராமலிங்கம்-பொதுப்பணித்துறை அமைச்சர்: பிரதமர் அறிவித்தார். செயல்படுத்தவில்லையே?
இவ்வாறு விவாதம் நடந்தது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.