சென்னை:பாலியல் புகார் தொடர்பான பிரச்னையில், பெண்ணை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
நொச்சிக்குப்பம், எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமரன், 32. கடந்த, 3ம் தேதி, பக்கத்து வீட்டை சேர்ந்த ராமுவின், ஒன்றரை வயது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக, இவர் மீது, மயிலாப்பூர் மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தலைமறைவானார்.
அருகில் வசித்து வரும் சிலர், அருவருக்கத்தக்க வார்த்தைகளால், முத்துக்குமாரின் தாய், கஸ்தூரியை, 58, திட்டி உள்ளனர். மனம் உடைந்த அவர், தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், முத்துக்குமரனின் தம்பி, ஆனந்தன், கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனு விவரம்:
பாலியல் புகார் தொடர்பாக, என் அண்ணன் மீது கொடுத்த புகாரை அடுத்து, போலீசார் என்னையும், என் மற்றொரு சகோதரன், தாய் கஸ்தூரியையும் அழைத்து சென்றனர்.
சிலரின் தூண்டுதலை அடுத்து, ராமு குடும்பத்தாருக்கு, ஒரு லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் எனக்கூறி, அவமானப்படுத்தியதுடன், மிரட்டலும் விடுத்தனர். அருவருக்கத்தக்க வார்த்தைகளால் திட்டி, என் தாயை அவமானப்படுத்தினர்.
இதனால், என் தாய் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப் பட்டு உள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.