Different show in Rameswaram | வறண்டன கண்மாய்கள்: வெளிநாடு திரும்பும் பறவைகள்: ராமேஸ்வரத்தில் வித்தியாசமான காட்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வறண்டன கண்மாய்கள்: வெளிநாடு திரும்பும் பறவைகள்: ராமேஸ்வரத்தில் வித்தியாசமான காட்சி

Added : பிப் 07, 2013 | கருத்துகள் (6)
Advertisement
 வறண்டன கண்மாய்கள்: வெளிநாடு திரும்பும் பறவைகள்: ராமேஸ்வரத்தில் வித்தியாசமான காட்சி

ராமநாதபுரம் :ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்மாய்கள் வறண்டு வருவதால், வெளிநாட்டு பறவைகள் சொந்த நாடுகளுக்கு திரும்ப துவங்கியுள்ளன. அதே சமயம், கடந்தாண்டை விட, தற்போது இரு மடங்கு அளவு "பிளமிங்கோ' பறவைகள், ராமேஸ்வரத்தில் முகாமிட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. ஆண்டுதோறும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து முக்குளிப்பான், பாம்புதாரா, கூழைக்கிடா, மஞ்சள் மூக்கு நாரை, அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், உள்ளான் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு வந்து செல்லும். பறவைகள் இனப்பெருக்கம் செய்யும் அளவிற்கு ஜூன், ஜூலை மாதம் வரை தண்ணீர் இருக்கும். ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக வெப்பமும், அதிக குளிரும் இல்லாமல் சராசரி ஒரே அளவாக இருப்பதால் இனப்பெருக்கம் செய்ய ஏதுவாக இருக்கின்றன.சரணாலயங்கள்: ராமநாதபுரத்தில் காஞ்சிரங்குளம், சித்திரங்குடி, மேல, கீழ செல்வனூர், தேர்த்தங்கால் மற்றும் சமீபத்தில் சேர்க்கப்பட்ட சக்கரக்கோட்டை கண்மாய் என, ஆறு பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. கடந்தாண்டு 26 ஆயிரத்து 731 பறவைகள் வந்தன. அதிகபட்சமாக தேர்த்தங்காலில் மட்டுமே, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் குவிந்தன.


கணக்கெடுப்பு "மந்தம்':

நடப்பாண்டு பருவமழை பொய்த்ததால், பறவைகள் சரணாலயங்களில் போதிய தண்ணீர் நிரம்பவில்லை. மழைக்கு முன்பாக வந்த, பறவைகள் வழக்கம் போல் கருவேல மரங்களில் கூடுகட்டி இடத்தை தக்க வைத்தன. அக்டோபர் துவக்கத்தில் பெய்த மழையால் கண்மாய்கள் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், ஓரளவிற்கு தண்ணீர் நிரம்பியது. அதன் பின் சாரல் மழையே பெய்தது. கண்மாய்கள் வற்ற துவங்கின. இதனால், மஞ்சள் மூக்கு நாரை, பாம்புதாரா, அரிவாள் மூக்கன் உள்ளிட்ட பல வகையான வெளிநாடு பறவைகள் சொந்த நாடுகளுக்கு திரும்ப துவங்கிவிட்டன. இதனால், பறவைகள் சரணாலயங்கள் களையிழந்து காணப்படுகின்றன.

வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: எந்தாண்டும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு பருவ மழை பொய்த்துப் போனதால் பறவைகள் சரணாலயங்களில் தண்ணீர் இல்லை. 30 ஆயிரம் பறவைகளை எதிர்பார்த்தோம். 10 ஆயிரம் பறவைகள் கூட வரவில்லை. வடமாநிலங்களில் கடுங்குளிர் நிலவி வருவதால், "பிளமிங்கோ' பறவைகள், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அதிகளவில் வரத்துவங்கியுள்ளன. தற்போது, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதிகளில் முகாமிட்டுள்ளன. இதன் எண்ணிக்கை கடந்தாண்டை காட்டிலும், தற்போது மூன்று மடங்காக உள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
07-பிப்-201313:27:58 IST Report Abuse
g.s,rajan மக்கள் மாதிரியே இதுவும் வெளிநாட்டுக்கு போயிடுதே
Rate this:
Share this comment
Cancel
Ashok ,India - India,இந்தியா
07-பிப்-201311:15:24 IST Report Abuse
Ashok ,India நீர் இல்லாததால் பறவைகள் பறந்தன.........உணவு தானியம் விளையும் இடங்களில் வீடுகள் பெருகுவதால் மக்களும் கூடிய விரைவில் நாடு விட்டு நாடு பறக்கும் நிலை ஏற்படும். மதுரை மாவட்டத்தில் கண்மாய் பாசனம் முழுமையாக அழிந்து விட்டது. ஆற்று பாசன பகுதிகளும் விரைவில் அழியும் தன்மையில் உள்ளன. அரசு இப்பொழுதே சுதாரித்து நஞ்சை விளை நிலங்களை காப்பாற்ற வேண்டும். இல்லையேல் அரிசி விலை கிலோ நூறு ரூபாயை தொடும்.
Rate this:
Share this comment
Cancel
B.Vigneshkumar - Jeddah,சவுதி அரேபியா
07-பிப்-201311:08:26 IST Report Abuse
B.Vigneshkumar பறவைகள் மட்டும் மாஆஆஆஆஆஆஆ ????????
Rate this:
Share this comment
Cancel
vayalum vazhvum-saravanakumar - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
07-பிப்-201309:56:35 IST Report Abuse
vayalum vazhvum-saravanakumar பாரம்பரியம் மிக்க நமது மக்களின் வாழ்கை பாழாப்போன பேராசை கொண்ட அரசியவதிகளால் வீணா போனதுதான் மிச்சம் இப்ப அது பறவைகளையும் அழிக்கிறது. பார்க்கிற பக்கம் எல்லாம் ரியல் எஸ்டேட், congrete காடுகள் மலையில் இருந்த மரங்களை வெட்டிய இந்த பரதேசிகள் இப்ப மரம் கிடைக்காததால மலையவே வெட்டி தள்ளுகின்றனர் ஆண்டவனின் படைப்ப அனுபவிக்கிற உரிமையை தான் நமக்கு கொடுத்திருக்கார் அதனை அழிக்க நமக்கு எந்த உரிமையும் இல்லை, அழிக்க நினைத்தால் அதன் விளைவு விபரீதம் ஆகும் என்பதற்கு இது ஒரு உதாரணம்
Rate this:
Share this comment
Raj - Chennai,இந்தியா
07-பிப்-201315:52:55 IST Report Abuse
Rajமதுரை பக்கத்தில் புராதன சின்னமாக அறிவிக்கப்பட்ட மலை குகை காணாமல் போய்விட்டது...
Rate this:
Share this comment
yogesh waran - chennai,இந்தியா
07-பிப்-201318:07:35 IST Report Abuse
yogesh waranமழை பெய்யும் போதெல்லாம் அதை நாம் சேகரித்து வைக்காமல் வீனாக விட்டதன் விளைவு தான் இது மனிதன் இனியாவது யோசித்து செயல்படட்டும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை