court news | ஐகோர்ட் தீர்ப்பு எதிரொலி: மருத்துவக்கல்லூரிக்கு அரசு இடம் ஒதுக்குமா?| Dinamalar

ஐகோர்ட் தீர்ப்பு எதிரொலி: மருத்துவக்கல்லூரிக்கு அரசு இடம் ஒதுக்குமா?

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

இட விவகாரம் தொடர்பான வழக்கில், அரசுக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால், கிண்டி, கிங் நோய் தடுப்பு மருந்து நிலைய வளாகத்தில், புதிய மருத்துவக் கல்லூரி துவங்க இடம் அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அண்ணா பல்கலைக் கழகம், கோவை, வேளாண் பல்கலைக் கழகம் ஆகியவற்றுக்கு, பல்கலைகளின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரிகள் உள்ளன. ஆனால், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ

பல்கலைக்கு இதுரை, இணைப்பு கல்லூரிகளை தவிர, தனியாக மருத்துவக் கல்லூரி இல்லை.
நீண்டகால இக்குறையை போக்கும் வகையில், 2007ம் ஆண்டு, ஆகஸ்ட்டில், மருத்துவ பல்கலை நிர்வாகம், ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தது.
அதில், "2008 -09ம் கல்வியாண்டு முதல், பல்கலை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை துவக்க, மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் அளித்த பதிலில், "300 படுக்கை வசதியுடன் கூடிய, மருத்துவமனை மற்றும் மாநில அரசின், அத்தியாவசிய சான்றிதழ் இல்லாமல், புதிய மருத்துவக் கல்லூரி துவங்க

அனுமதி அளிக்க முடியாது' என, தெரிவிக்கப்பட்டது.
மருத்துவக்கல்லூரி அமைய, கிண்டி, கிங் நோய் தடுப்பு மருத்துவ வளாகத்தில் உள்ள இடத்தை வழங்க வேண்டுமென மருத்துவ பல்கலை சார்பில் அரசிடம் விண்ணப்பிக்கப்பட்டது.
குறிப்பபிட்ட நிலம் தொடர்பாக, வழக்கு நடந்து வருவாதால், கல்லூரிக்கு தேவையான, 25 ஏக்கர் நிலத்தை தர இயலாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கிங் நோய் தடுப்பு மருத்துவ நிலைய வளாக நில உரிமை வழக்கில், அரசுக்கு சாதகமாக ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இதனால், குறிப்பிட்ட நிலம் அரசுக்கு சொந்தமாகியுள்ளது.
இடம் கோரி, மருத்துவ பல்கலை, ஐகோர்ட்டில் தொடர்ந்த மற்றொரு வழக்கு விசாரணையில், இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, குறிப்பிட்ட இடத்தில், மருத்துவ கல்லூரிக்கு இடம் வழங்குவது குறித்து

பரிசீலிக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டது.
ஐகோர்ட்டின் உத்தரவையடுத்து, மருத்துவ கல்லூரிக்கான இடத்தை வழங்க, தமிழக அரசு முன்வருமா என்ற எதிர்பார்ப்பு, பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த எதிர்பார்ப்பை, அரசு பூர்த்தி செய்யும் பட்சத்தில், அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை, 19 ஆக உயர்வதுடன், ஆண்டுதோறும், குறைந்தபட்சம், 100 எம்.பி.பி.எஸ்., இடங்கள், அரசு ஒதுக்கீட்டில்

கிடைக்க வாய்ப்புள்ளது.
கோர்ட் தீர்ப்பிற்கு பின், மருத்துவப் பல்கலை நிர்வாகத்திடம் இருந்து இதுவரை, மருத்துவக் கல்லூரி கட்ட இடம் கோரப்படவில்லை என, மருத்துவக் கல்வி இயக்கக வட்டாரங்கள் தெரிவித்தன.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங - chennai,இந்தியா
07-பிப்-201306:49:51 IST Report Abuse
ஆரூர் ரங போன ஆட்சியில் திமுக தலைவர்ககளின் உதவியோடு அந்த ஆயிரம் கோடி ரூபாய் நிலம் பொய்யான நபர்களுக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டது .( அவங்க அடையார் முன்னாள் ஜமீந்தார் பரம்பரைன்னு கதை விட்டது பெரிய ஜோக் ). கிங் இன்ஸ்டிடூட் அன்புமணி மூடப் பார்த்தார், திமுக ஆட்களோ அதற்கு போகும் பாதையையே தனியாருக்கு தாரை வார்த்துவிட்டனர். இப்போது சிறிய மீனான பட்டா வழங்கிய ஜூனியர் அதிகாரி மட்டும் சஸ் பெண்ட்? பெரிய முதலைகள்?/
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.