கோவை : 7
ஆயிரம் ஈமு கோழிகளை ஏலம் விடுவது தொடர்பான வழக்கில், சுசி ஈமு நிறுவன
நிர்வாகி நேற்று டான்பிட் கோர்ட்டில் ஆஜராகி சாட்சி அளித்தார்.
கோவை,ஈரோடு
மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் நடந்த ஈமு வளர்ப்பு நிறுவனங்களின் பல நூறு
கோடி "மோசடி' பற்றி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
இதுதொடர்பான வழக்குகள் கோவை டான்பிட் கோர்ட்டில் விசாரிக்கப்படுகின்றன.
மேலும்,
இம்மோசடியில் சிக்கிய நிறுவனங்களில் வளர்க்கப்பட்டு, கைவிடப்பட்ட ஈமு
நிறுவனங்களை அரசு கையகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதன்மூலம்
7. 000க்கும் அதிகமான ஈமுக்கள் முடக்கம் ஆகியுள்ளது.
இந்த ஈமுக்களை
ஏலத்தில் விட அரசு முடிவு செய்துள்ளது.இதற்காக கோர்ட்டின் அனுமதி
கோரப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுசி ஈமு நிர்வாகி குரு
மனுதாக்கல் செய்துள்ளார். நேற்று, இம்மனு நீதிபதி சீனிவாசன் முன்னிலையில்
விசாரணைக்கு வந்தது. இதில் எதிர்தரப்பு விசாரணை நடந்தது. இதில் சுசி ஈமு
குரு ஆஜரானார். வரும் 11ம் தேதி இம்மனு மீதான குறுக்கு விசாரணை நடக்கிறது.
அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல்கள் கனகராஜ், மாணிக்கராஜ் ஆஜராகினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.