E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
விஜிலன்ஸ், விரைவு நீதிமன்ற காலிப்பணியிடங்களை நிரப்ப கோரிக்கை
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 பிப்
2013
00:45

கோவை : காலியாக உள்ள கோவை விஜிலன்ஸ் கோர்ட் அரசு வக்கீல் மற்றும் கூடுதல் மாவட்ட நீதிபதி(மூன்றாவது விரைவு கோர்ட்) பணியிடங்களை உடனடியாக நிரப்பி, வழக்குகள் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வக்கீல்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில், 38 கோர்ட்கள் செயல்படுகின்றன. இவற்றில் முக்கியமான ஒரு சில கோர்ட்களில் வழக்குகளை விசாரிக்க நீதிபதியில்லை. நீதிபதி பணியிடம் பல மாதங்களாக காலியாக உள்ளது. வேறு நீதிபதிகள் நியமிக்கப்படாததால் வழக்குகள் தேக்கமடைந்து வருகின்றன.
லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் கைது செய்யப்பட்டு ஆஜர்படுத்தும் முக்கிய கோர்ட்டாக விஜிலன்ஸ் கோர்ட் செயல்படுகிறது. துவக்கப்பட்ட புதில் இக்கோர்ட் பல வழக்குகளை அதிரடியாக விசாரித்து தீர்ப்பு வழங்கியது. மூன்றே மாதங்களில் கோர்ட்டில் ஆஜராகி வந்த அரசு வக்கீல் கேசவன் அதிரடியாக மதுரைக்கு மாற்றலாகி சென்றார்.
இவருக்கு பதில் வேறு யாரும் நியமிக்கப்படவில்லை. கடந்த ஏழு மாதங்களாக இப்பணியிடம் காலியாக உள்ளது. தற்காலிகமாகக் கூட இப்பொருப்பை யாரும் ஏற்கவில்லை. இதனால் மிக முக்கியமான வழக்குகளின் விசாரணை மற்றும் கோர்ட் பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.
லஞ்சம் வாங்குபவர்கள் யாரென தெரிந்திருந்தும் அவர்களை கைது, விசாரிக்க அரசு வக்கீல் இல்லாததால் போலீசார் ஆர்வம் காட்டுவதில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஐகோர்ட் விரைந்து நடவடிக்கை எடுத்து, இக்கோர்ட்டுக்கு அரசு வக்கீல் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல் கொலை, கொள்ளை, கிரிமினல் அப்பீல் வழக்குகளை விசாரிக்கும் மூன்றாவது விரைவு நீதிமன்றத்தில் (தற்போது கூடுதல் மாவட்ட நீதிமன்றம்) கடந்த நான்கு மாதங்களாக நீதிபதி பணியிடம் காலியாக உள்ளது. இக்கோர்ட்டில் பணியாற்றிய நீதிபதி ஜஸ்டின் டேவிட் பதவி உயர்வு பெற்று கோவை சி.பி.ஐ.,கோர்ட்டுக்கு சென்று விட்டார். இதுவரை வேறு யாரும் நீதிபதியாக நியமிக்கப்படவில்லை.
முக்கியமான இவ்விரண்டு பணியிடங்களை உடனடியாக நிரப்பி, இக்கோர்ட்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் விரைந்து விசாரித்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஐகோர்ட்க்கு வக்கீல்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.