ஸ்ரீபெரும்புதூர்:குணகரம்பாக்கம் கிராமத்தில், செவிலியர் வரததால், துணை சுகாதார நிலையம் மூடப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி கர்ப்பிணிப் பெண்கள் சிகிச்சைக்காக தவித்து வருகின்றனர்.
சுங்குவார்சத்திரம் அடுத்துள்ள குணகரம்பாக்கம் கிராமத்தில்,
1,500 பேர் வசிக்கின்றனர்.
இக்கிராமத்தை சுற்றி செல்லம்பட்டிடை, கோட்டூர், மகாதேவிமங்கலம் ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன. விவசாயம் முக்கிய தொழிலாகும்.
இப்பகுதி மக்களின் சுகாதாரத்தை வளர்க்கவும், மாணவர்
களின் நலனை கருத்தில் கொண்டும், குணகரம்பாக்கம் கிராமத்தில் துணை சுகாதார நிலையம்
ஆரம்பிக்கப்பட்டது.
குடியிருப்புடன்...
துணை சுகாதார நிலையத்தில், கிராம சுகாதார செவிலியர் தங்கி, 24 மணி நேரமும், மருத்துவ சேவை செய்ய குடியிருப்புடன் கூடிய சுகாதார நிலையம் கட்டப்பட்டது.
சுகாதார செவிலியர், கிராமத்தில் தங்கி, கர்ப்பிணிப் பெண்கள் கணக்கெடுப்பு, பெண்களுக்கு தடுப்பூசி போடுதல், பிரசவம் பார்த்தல், பள்ளி குழந்தைகளின் சுகாதாரம் பேணி காத்தல், ஆரோக்கியமான உணவு
வழங்குதல் குறித்து பணிகளை சுகாதார செவிலியர்கள்
செய்ய வேண்டும்.
திறப்பதில்லை
சுகாதார செவிலியர்கள், துணை சுகாதார நிலையத்தை திறப்பது கிடையாது.
இதனால், கர்ப்பிணிப்
பெண்கள், குழந்தைகள் மருத்துவ சிகிச்சைக்காக, மதுரமங்கலம் அல்லது காஞ்சிபுரம் செல்ல வேண்டியுள்ளது.
அவசர நேரங்களில், முதலுதவி சிகிச்சை பெற முடியாமல்,
கருவுற்ற தாய்மார்கள் அவதிப்
படுகின்றனர். இக்கிராம மக்களின் நலன் கருதி, துணை சுகாதார நிலையத்தை, தினமும், திறக்க வேண்டும்.
சுகாதார செவிலியர்கள், தங்கி பணி புரிய வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு, ஆரோக்கியம் குறித்து விளக்கம் அளிக்க
வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.