மதுரை : மதுரை
வைகை ஆற்றிலுள்ள பழமையான கல் மண்டபங்களை புனரமைக்க கோரி தாக்கலான
வழக்கில், அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
மதுரை
வக்கீல் சிவகுமார் தாக்கல் செய்த மனு: மதுரை வைகை ஆற்றில் திருமலைராயர்
படித்துறை, கல்பாலம் இடையே பழமையான கல் மண்டபம் உள்ளது. மீனாட்சி அம்மன்
கோயில் உற்சவத்திற்காக அமைத்துள்ளனர். மன்னர் திருமலை நாயக்கர் ஆட்சிக்
காலத்தில், தேனூர் கல் மண்டபத்தை கட்டியுள்ளனர். இரு மண்டபங்களையும்
முறையாக பராமரிக்கவில்லை. மேற்கூரை, அஸ்திவாரம் மோசமாக உள்ளன. அவ்வப்போது,
வெள்ளை நிற வண்ணம் மட்டும் தீட்டுகின்றனர். இரு கல் மண்டபங்களையும்
பலப்படுத்த, புனரமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார்.
நீதிபதிகள்
சித்ரா வெங்கட்ராமன், எஸ்.விமலா முன், விசாரணைக்கு மனு வந்தது. மதுரை
கலெக்டர், தொல்லியல்துறை உதவி இயக்குனர், அறநிலையத்துறை கமிஷனருக்கு
நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை பிப்., 20 க்கு
தள்ளிவைத்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.