மதுரை : மதுரை
ஐகோர்ட் கிளையில் பாதுகாப்பை பலப்படுத்தக் கோரிய வழக்கில், "ஏற்கனவே
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், கோர்ட் மேலும் உத்தரவு பிறப்பிக்கத்
தேவையில்லை. மனு முடிக்கப்படுகிறது,' என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மண்ணாமடிங்கலம்
வக்கீல் தியாகராஜன் தாக்கல் செய்த பொதுநல மனு: மும்பை தாஜ் ஓட்டலில், 2008
நவம்பரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 200 பேர் பலியாகினர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு, பயங்கரவாத அச்சுறுத்தலைத்தொடர்ந்து
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சோதனைக்கு பின்பே, பக்தர்களை
அனுமதிக்கின்றனர். மதுரை ஐகோர்ட் கிளையில், பயங்கரவாதிகள் தாக்குதல்
நடத்த வாய்ப்புள்ளது. எவ்வித கட்டுப்பாடுமின்றி, அனைவரையும் வாசல் வழியாக
அனுமதிக்கின்றனர். இந்த வாய்ப்பை பயங்கரவாதிகள் பயன்படுத்திக்கொண்டு,
கோர்ட்டில் இருப்பவர்களை பிணையக்கைதிகளாக பிடித்துச் செல்ல வாய்ப்புண்டு.
தாஜ்மகாலில்
போலீசார் கட்டுப்பாட்டு அறை அமைத்துள்ளனர். வெடி குண்டு தடுப்புப்பிரிவு
போலீசார் உள்ளனர். உள்ளே நுழையும் சுற்றுலா பயணிகளை, பல்வேறு
பரிசோதனைகளுக்கு பின் அனுமதிக்கின்றனர். அது போல், ஐகோர்ட் கிளைக்கு
உயர்ந்தபட்ச, நவீன பாதுகாப்பு கருவிகளுடன் கூடிய பாதுகாப்பு அவசியம்.
அதற்குரிய திட்டம் தயாரித்து செயல்படுத்த வேண்டும். "மெட்டல் டிடெக்டர்'கள்
அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் சித்ரா
வெங்கட்டராமன், எஸ்.விமலா கொண்ட பெஞ்ச் முன்னிலையில், மனு விசாரணைக்கு
வந்தது. மனுதாரரே ஆஜராகி வாதாடினார். நீதிபதிகள்," ஐகோர்ட் கிளையில்
பாதுகாப்பை பலப்படுத்த ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில்,
இக்கோர்ட் மேலும் எவ்வித உத்தரவும் பிறப்பிக்கத் தேவையில்லை. மனு
முடிக்கப்படுகிறது,' என உத்தரவிட்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.