தர்மபுரி : தர்மபுரி கலவர வழக்கில் கைதான, 91 பேருக்கு, தர்மபுரி நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.
தர்மபுரி
அடுத்த நாயக்கன்கொட்டாயில், கடந்த நவ., 7ம் தேதி, காதல் கலப்பு திருமணம்
தொடர்பாக, கலவரம் ஏற்பட்டது. இதில், அண்ணாநகர், கொண்டம்பட்டி, நத்தம்,
"காலனி' ஆகிய பகுதிகளில், 300 வீடுகளை கலவர கும்பல், தீ வைத்து
கொளுத்தியது; பொருட்கள் சூறையாடப்பட்டன.
இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி.,
போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுவரை, 155 பேரை போலீசார் கைது
செய்துள்ளனர். கைதானவர்களில், 138 பேர், தர்மபுரி மாவட்ட அமர்வு
நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு, மனு செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்,
மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
வழக்கில் கைதான, 91 பேர், நேற்று,
தர்மபுரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம், 2ல் ஜாமின் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) ஜோதி, 91 பேருக்கும் நிபந்தனை ஜாமின்
வழங்கி, தினமும், தர்மபுரி, சி.பி.சி.ஐ.டி., போலீஸ் அலுவலகத்தில், காலை,
10:00 மணிக்கு ஆஜராகி, கையெழுத்து போட வேண்டும் என, உத்தரவிட்டார்.
வக்கீல்
அழகுமுத்து கூறுகையில், ""கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் மீது,
90 நாளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். நேற்று
முன்தினத்துடன், 90 நாள் முடிந்த நிலையில், 91 பேருக்கு நேற்று ஜாமின்
கிடைத்துள்ளது,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.