திருப்போரூர் : மது ஒழிப்பு இரண்டாம் கட்ட பிரசார நடைபயணத்தை, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, வரும் 18ம் தேதி கோவளத்தில் துவக்கி வைக்கிறார்.
ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, மது ஒழிப்பு பிரசார நடைபயணத்தை, நெல்லையில் கடந்த டிசம்பர் மாதம் துவக்கி, மதுரையில் முடித்தார். இரண்டாம் கட்டமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில், 10 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். திருப்போரூர் ஒன்றியம் கோவளம் கிராமத்தில், மது ஒழிப்பு பிரசார தொண்டர்களுடன், வரும் 18ம் தேதி நடைபயணத்தை துவக்குகிறார். திருப்போரூர், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் நடைபயணம் செல்லும் அவர், மறைமலைநகரில் பயணத்தை முடிக்க உள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.