கடலூர் : சொத்து
குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி, மாஜி அமைச்சர்
பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர், நேற்று மனு தாக்கல்
செய்தனர்.
தி.மு.க., ஆட்சியில், சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த
பன்னீர்செல்வம். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, 2011ம் ஆண்டு
அக்டோபர், 13ம் தேதி பன்னீர்செல்வம், அவரது மனைவி செந்தமிழ்ச்செல்வி, மகன்
கதிரவன் மீது, லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிந்தனர்.
இந்த
வழக்கு, கடந்த ஆகஸ்ட், 2ம் தேதி கடலூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி
முன், விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்ட மூவரும் ஆஜராகினர்.
பின்,
நான்கு முறை ஒத்தி வைத்த, ஜனவரி 9ம் தேதி விசாரணைக்கு ஆஜரான ,
மூவருக்கும் 2,383 பக்கங்கள், 113 ஆவணங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல்
வழங்கிய நீதிபதி கீதாஞ்சலி, மூவருக்கும், ஜனவரி 23ம் தேதி குற்றச்சாட்டு
வரையப்படும் என அறிவித்தார். அன்று, பன்னீர்செல்வம் மட்டுமே ஆஜரானதால்,
வழக்கு பிப்ரவரி 6ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது .
நேற்று வழக்கு
விசாரணைக்கு வந்த போது, பன்னீர்செல்வத்தின் மகன் கதிரவன் மட்டும் ஆஜரானார்.
மற்ற இருவரும், உடல் நிலை சரியில்லாததால் வர இயலவில்லை என, மனு தாக்கல்
செய்யப்பட்டது.
தொடர்ந்து, வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டி, மூன்று
பேருக்கும் தனித்தனியாக வழக்கறிஞர்கள், "டிஸ்சார்ஜ்' மனு தாக்கல் செய்தனர்.
மனுவை ஏற்ற நீதிபதி கீதாஞ்சலி, இதற்கு அரசு தரப்பில் பதில் அளிக்க கூறி,
வழக்கு விசாரணையை, வரும், 27ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.