திருச்சி: ""காவி
பயங்கரவாதம் குறித்து, உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறிய
கருத்தை வாபஸ் பெறவேண்டும்; இல்லாவிட்டால், பார்லிமென்ட் பட்ஜெட்
கூட்டத்தொடரை புறக்கணிப்போம்,'' என, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய
துணைத்தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.
பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் துணைத்தலைவரும், பார்லிமென்ட் நிலைக்குழு தலைவருமான வெங்கையா நாயுடு, நேற்ற திருச்சி வந்தார்.
அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஆண்டுக்கு,
ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை என்றும், 100 நாளில் விலைவாசியை
குறைப்பதாகவும், தேர்தல் அறிக்கையில் தெரிவித்த காங்கிரஸ் கட்சி, ஒன்பது
ஆண்டுகளில், ஒன்பது மடங்கு விலைவாசியை உயர்த்தியிருக்கிறது. வேலையில்லா
திண்டாட்டம் அதிகரித்து விட்டது. ஒவ்வொரு ஆண்டும், ஒரு கோடிக்கும்
மேற்பட்ட, வேலையில்லாத இளைஞர்கள் உருவாகிக் கொண்டுள்ளனர்.
குஜராத்
உள்பட, இரண்டு மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்கள் அனைத்தும், கடும் மின்
பற்றாக்குறை நிலவுகிறது. இதை நிவர்த்தி செய்ய, மத்திய அரசுக்கு வழி
தெரியவில்லை. வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, மின் விநியோகம்,
பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட எல்லா விஷயங்களிலும், காங்கிரஸ், திறனற்ற
அரசாக உள்ளது.
குஜராத்தில், முகமது சூபி என்ற காங்கிரஸ் அமைச்சர்,
வெடிகுண்டு வீசிய வழக்கில், 20 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ளார். ஆனால்,
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உள்துறை அமைச்சர், "ஆர்.எஸ்.எஸ்., பாரதிய ஜனதா
பயிற்சி முகாம்கள், தீவிரவாத கூடாரம்' என்று கூறுகிறார். உள்துறை அமைச்சர்
சுஷில்குமார் ஷிண்டே கூறிய கருத்தை, வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால்,
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரை புறக்கணிப்போம்.
அரை
வேக்காட்டுத்தனமாக கருத்து தெரிவித்த சுஷில்குமார் ஷிண்டே, உள்துறை
அமைச்சர் பதவிக்கு பொருத்தமானவர் இல்லை. காவி பயங்கரவாதம் குறித்து பேசிய
அவர், மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால், காங்கிரஸ் அரசு அவரை பதவி
நீக்கம் செய்ய வேண்டும்.
காங்கிரஸ் கட்சியின் பொருளாதாரக் கொள்கையால்,
1991ம் ஆண்டில், இந்தியா தங்கத்தை அடகு வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.
தற்போது, 2013ம் ஆண்டும் அதே நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. காவிரி
நதிநீர் பிரச்னை, இரண்டு மாநிலங்கள் பேசி தீர்க்கவேண்டிய பிரச்னை.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.