திருச்சி:
"திருச்சியில், இன்று நடக்கும், எம்.பி., சிவா இல்லத் திருமண நிகழ்ச்சி,
தேர்தல் கூட்டணியை உறுதி செய்யும்' என, தி.மு.க.,வினர் கருதுகின்றனர்.
திருச்சி,
தி.மு.க., எம்.பி., சிவா, பல்வேறு கட்சி தலைவர்களுடன் நெருங்கிய நட்பு
கொண்டவர். அவர், திருச்சியில் இன்று நடக்கும் தன் மகள் திருமணத்துக்கு,
பாரதிய ஜனதா, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தே.மு.தி.க.,- அ.தி.மு.க.,-
ம.தி.மு.க., உள்பட பல்வேறு கட்சி முக்கிய தலைவர்களுக்கும்,
நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுத்து பத்திரிகை வைத்துள்ளார்.
தே.மு.தி.க.,
தலைவர் விஜயகாந்துக்கு, நேரில் சென்று பத்திரிகை வைத்துள்ளார். எனவே,
நிச்சயம் விஜயகாந்த் இந்த திருமணத்துக்கு வருவார் என,
எதிர்பார்க்கப்படுகிறது.
அ.தி.மு.க., கூட்டணியில் இருக்கும் போது,
தி.மு.க., தலைவர் கருணாநிதியை, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கடுமையாக
விமர்சித்தார். தற்போது, அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து பிரிந்து வந்துள்ள,
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், கருணாநிதியை விமர்சிப்பதை குறைத்துக்
கொண்டார்.
தேர்தலுக்கு முன் நடக்கும் இது போன்ற திருமண நிகழ்ச்சிகளில்
தான், அரசியல் கட்சிகளின் தேர்தல் கூட்டணி <உறுதி செய்யப்படும். எனவே,
எம்.பி., சிவா இல்லத் திருமண நிகழ்ச்சியில், விஜயகாந்த் கலந்து கொண்டால்,
அந்த சம்பவம், வரும் லோக்சபா தேர்தலில் தி.மு.க.,-தே.மு.தி.க., கூட்டணியை
உறுதி செய்யும், என்றே கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.