சென்னை : வல்லூர் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுது நீக்கப்பட்டதால், மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது. தமிழக மின் வாரியமும், தேசிய அனல் மின் நிலையமும் இணைந்து, திருவள்ளூர் மாவட்டம் வல்லூரில், 1,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையத்தை அமைத்துள்ளன. நவம்பர் மாதத்திலிருந்து, மின் உற்பத்தி துவங்கியுள்ளது. இந்நிலையத்திற்கு தேவையான நிலக்கரி, ஓடிசா மாநிலத்திலிருந்து, கப்பல் மூலம் கொண்டு வரப்படுகிறது. எண்ணூர் துறைமுகத்திலிருந்து,"கன்வேயர் பெல்ட்' வழியாக, அனல் மின் நிலையத்திற்கு, நிலக்கரி வருகிறது. அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரியை கொண்டு செல்லும்,கன்வேயர் பெல்ட்டில் திடீர் கோளாறு ஏற்பட்டதால், நிலக்கரி வரத்து தடைப்பட்டது. இதன் காரணமாக, கடந்த இரு நாட்களாக, மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. நிலக்கரி செல்லும் வழித்தடத்தில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியில், அதிகாரிகள் ஈடுபட்டனர். இதையடுத்து, பழுது நீக்கப்பட்டு, உற்பத்தி துவங்கியதாக, மின்வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.இதுகுறித்து, மின்வாரிய உயர் அதிகாரி கூறியதாவது: மாநிலத்தின் பங்காக, வல்லூர் யூனிட்டில் இருந்து, 375 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. கன்வேயர் பெல்ட்டில் ஏற்பட்ட பழுதால் நிறுத்தப்பட்ட மின் உற்பத்தி, நேற்று மீண்டும் துவங்கியது. கடந்த ஒரு மாதமாக, 9,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. வல்லூர் மின் உற்பத்தி பாதிப்பால், 9,000 மெகாவாட்டாக உற்பத்தி குறைந்தது. ஓரிரு நாளில், நெய்வேலியில் தனியார் மின் உற்பத்தி நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, 250 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். எனவே, கூடுதலாக 600 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.