விருதுநகர் : விருதுநகரில்
நடந்த வழிப்பறி தொடர்பாக, மூன்று முறை சம்மன் அனுப்பியும், சாட்சி சொல்ல
வராத சேலம் இன்ஸ்பெக்டருக்கு ,"பிடிவாரன்ட்' பிறப்பித்து, விருதுநகர்
மாஜிஸ்திரேட் சசிரேகா உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர் கஸ்தூரிபாய் நகரை
சேர்ந்தவர் காஞ்சனா தேவி, 59. இவர், 2008 மே., 4 ல் வீட்டிலிருந்து கடைக்கு
நடந்து சென்றார். இவர் அணிந்திருந்த 10 பவுன் நகையை, விருதுநகரை சேர்ந்த
வெற்றி, 45, பறித்து
சென்றார்.இது தொடர்பாக, அப்போது விருதுநகர்
கிழக்கு ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக பணிபுரிந்த சந்தோஷ் குமார், குற்ற இறுதி
அறிக்கை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு தொடர்பாக, விருதுநகர் ஜே.எம். 2
கோர்ட்டில் சாட்சி அளிக்க, மூன்று முறை சம்மன் அனுப்பியும், தற்போது சேலம்
ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் சந்தோஷ் குமார் வரவில்லை. இதை தொடர்ந்து இன்ஸ்பெக்டருக்கு "பிடிவாரன்ட்' பிறப்பித்து, மாஜிஸ்திரேட் சசிரேகா உத்தரவிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.