திருப்பூர் : திருப்பூரில்
கடந்த இரண்டு மாதமாக மின்வெட்டு நேரம் குறைந்திருந்த நிலையில், மீண்டும்
அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டதால், தொழில்துறையினர் அதிர்ச்சி
அடைந்துள்ளனர்.
திருப்பூரில் நூற்பாலைகள், பின்னலாடை உற்பத்தி, அரிசி,
ஆயில் மில்கள், விசைத்தறி, இயந்திரங்கள், பாத்திர உற்பத்தி,கோழி பண்ணைகள்,
விவசாயம், இயந்திரங்கள் உற்பத்தி என தொழில்கள் அதிகம் உள்ளன.
தினமும் சராசரி, 700 முதல் 750 மெகாவாட் வரை, மின்சாரம் தேவைப்படுகிறது.
கடந்த
இரு மாதங்களாக, நகர பகுதிகளில் இரண்டு மணி நேரம்; கிராம பகுதிகளில்
அதிகபட்சமாக நான்கு மணி நேரம் என்ற அளவிலேயே மின்வெட்டு இருந்தது. அடிக்கடி
மின்வெட்டு ஏற்படாமல், சீராக குறிப்பிட்ட
நேரம் மட்டும் ஏற்பட்டதால், பொதுமக்களும், தொழில் துறையினரும் நிம்மதியடைந்தனர்.
ஆனால்,
கடந்த சில நாட்களாக மீண்டும் மின்வெட்டு நேரம் படிப்படியாக அதிகரித்து
வருகிறது. திடீர், திடீரென மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இரண்டு
நாட்களாக தினமும் சராசரியாக, எட்டு மணி நேரம் வரை நகர
பகுதிகளிலும்,
கிராம பகுதிகளில் 10 மணி நேரம் வரையிலும் மின் தடை ஏற்பட்டது. இதனால்,
பொதுமக்களும், தொழில் துறையினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கோடை காலம்
துவங்குவதற்கு முன்பே, மின் வெட்டு நேரம் அதிகரித்துள்ளது; நீர் மின்
உற்பத்தி குறைவு, மின் தேவை அதிகரிப்பு ஆகிய காரணங்களால், மின்வெட்டு
மேலும் நேரம் அதிகரிக்கும் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். மேற்பார்வை பொறியாளர் நிர்மலதா கூறியதாவது:
ரேணிகுண்டா
மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட பழுதால், நமக்கு கிடைக்க வேண்டிய,
1,000 மெகாவாட் மின்சாரம் தடைபட்டுள்ளது. இதனால், மீண்டும் மின்வெட்டு
நேரம் அதிகரித்துள்ளது. தடையில்லாமல்
மின்சாரம் கிடைத்து வந்தபோது, 700 மெகாவாட் வரை திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில் பயன்படுத்தப்பட்டது.
தற்போது,
480 மெகாவாட் மட்டுமே கிடைத்து வருகிறது. இதனால், மீண்டும் எட்டு மணி
நேரம் வரை மின் வெட்டு ஏற்படுகிறது. இரண்டு நாட்களுக்குள் நிலைமை
சரியாகும். கோடை காலத்தில், காற்றாலை மூலம் மின் உற்பத்தியாக வாய்ப்புள்ளதால், மின்வெட்டு நேரம் அதிகரிக்க வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.