Karunanidhi wants to warn Rajabakshea | ராஜபக்ஷேவை கண்டிக்க கருணாநிதி வேண்டுகோள்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ராஜபக்ஷேவை கண்டிக்க கருணாநிதி வேண்டுகோள்

Updated : பிப் 10, 2013 | Added : பிப் 07, 2013 | கருத்துகள் (29)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ராஜபக்ஷேவை கண்டிக்க கருணாநிதி வேண்டுகோள்

சென்னை :"தமிழர்களுக்கு அதிகார பகிர்வை வழங்குவதாக அளித்த உறுதிமொழியை, இலங்கை அதிபர் ராஜபக்ஷே மீறி விட்டதால், அவருக்கு, மத்திய அரசு மற்றும் சர்வதேச அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:இலங்கை தீவின், 65வது விடுதலை நாள் விழாவில், இலங்கை அதிபர் ராஜபக்ஷே பேசுகையில், "தமிழர்களுக்குத் தன்னாட்சி அதிகாரம் தர முடியாது. நாட்டை இன ரீதியாகப் பாகுபடுத்துவது என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது' என்று தெரிவித்துள்ளார்.மேலும், அவர் தனது உரையில், இன வேறுபாடுகளைப் பற்றியும், மத வேறுபாடுகளைப் பற்றியும், சிங்களர்கள், தமிழர்கள், முஸ்லிம்களின் உன்னத கலாசாரத்தைப் பற்றியும், இந்த பூனையும் பால் குடிக்குமா என, கேட்குமளவுக்குப் பேசியிருக்கிறார்.


ஒரே மொழி, ஒரே மதம் என, இலங்கை நாட்டைச் சர்வாதிகாரப் பாதையில், செலுத்திக் கொண்டிருக்கும் ராஜபக்ஷேவை, மனித உரிமைகள், மனித நேயம் ஆகியவற்றுக்கு எதிராகப் பல்வேறு போர்க் குற்றங்களைப் புரிந்த, சர்வதேச குற்றவாளியாக, உலக நாடுகள் பார்க்கின்றன. தமிழர்களுக்கு அதிகார பகிர்வை வழங்குவதாக, இந்தியாவுக்கும், மற்ற நாடுகளுக்கும், நீண்ட காலமாக அளித்து வந்த உறுதிமொழியை, இப்போது செய்திருக்கும் அறிவிப்பின் மூலமாக மீறியிருக்கிறார். அவருக்கு உலகமெங்கும் வாழும் தமிழர்களும், இந்தியாவும், சர்வதேச அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங - chennai,இந்தியா
07-பிப்-201306:52:22 IST Report Abuse
ஆரூர் ரங ஆயுத சப்ளை யில் பத்து பர்சென்ட் கூட கொடுக்காமல் சொக்கத்தங்கம் ஏமாற்றி விட்டாரோ? அதுக்காக கருணா தனது உயிர் நண்பர் பக்சேயை எதிர்க்கலாமா ?
Rate this:
Share this comment
Cancel
Vilathur Nandhiyar - THANJAVUR ,இந்தியா
07-பிப்-201306:36:07 IST Report Abuse
Vilathur Nandhiyar நீங்கள் தானே தலைவா ..சிங்களர்களுக்கு ஆத்திரம் ஏற்படாதவகையில் இங்குள்ள தமிழர்கள் நடந்து கொள்ளவேண்டும் என்றீர்கள் ...இன்னொரு நாட்டின் இறையாண்மையின் நம்மால் அழுத்தம் கொடுக்க முடியாது என்றீர்கள் , நாங்களே ஒரு அடிமை ...எனவே இன்னொரு அடிமைக்கு உதவமுடியாது என்றீர்கள் ...நாற்பது ஆண்டுகால இலங்கை தமிழர் பிரச்சனையை நன்கு நாளில் தீர்கமுடியது என்றீர்கள் ...ஆயிற்றக்கனக்கில் சிங்கள ராணுவம் ஈழ தமிழர்களை அழித்துக்கொண்டு இருக்கும்போதே போர் நின்று விட்டதென்று பிதற்றிநீர்கள் ...சிங்கள விமானம் கிபீர் குண்டுகளை வீசியதை மழை தூவானம் என்றீர்கள் ..உங்கள் மகள் கனிமொழி ராஜபக்சேவுடன் விருந்து அருந்திவிட்டு, அவன் கொடுத்த சூட்கேஸ் நிறைய பரிசு பொருட்களை வாங்கி மகிழ்ந்தீர்கள் ..ஈழ தமிழர்களுக்காக தமிழ் நாட்டில் போராடியவர்களுக்கு நீங்கள் முதல்வராக இருந்து கொடுத்த தொல்லைகள் மறக்க கூடியதா ...ஈழதமிழர் கொத்து கொத்தாக இறைந்தபோது நீங்கள் இங்கே உண்ணாவிரத நாடகம் ,எம்பிக்கள் ராஜினாமா நாடகம் , உடல் நிலை சரியில்லையென்று நாடகம் ஆடினீர்கள் ...தமிழ் மூதாட்டி பார்வதி அம்மாள் தமிழ் நாட்டிற்கு உடல்நலம் குன்றி சிகிச்சைக்காக வந்தபோது ..கொஞ்சம் கூட இறக்கம் இல்லாத அரக்கனாக அவர்களை அதே விமானத்தில் திருப்பி அனுப்பியதை எந்த தமிழனாவது மறப்பனா ? ...தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை சுட்டு கொன்றதை ,,சில பேராசை பிடித்த மீனவர்கள் எல்லை தண்டி மீன்பிடிப்பதால் சிங்கள கடற்படை சுட்டு கொல்கிறது என்றீர்கள் ...நீங்கள் தமிழ் நாட்டின் முதல்வராய் இருந்தபோது ..பதவி கண்ணை மறைத்து விட்டது ..தேர்தலில் நங்கள் உங்கள் கட்சிக்கு ஆப்பு வைத்தவுடன் ..ஈழ தமிழர்கள் மேல் உங்களுக்கு பாசம் பொத்துக்கொண்டு வருகிறது ...உங்கள் இந்த நடிப்பை பாராட்டி சிறந்த நடிகருக்கான விருதை உங்களுக்கு தரலாம் ...ஆனால் எல்லாவற்றையும் இழந்து நிற்கும் ஈழ தமிழர் ..கண்ணீரில் உங்கள் அரசியல் பிழைப்பை நடத்த வேண்டுமா ? ...தமிழன எதிரி ராஜபக்சே என்றால் ..நீங்கள் யார் ?
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
07-பிப்-201307:31:11 IST Report Abuse
Pannadai Pandianஇன்று ஈழத்தமிழனின் முதல் எதிரி சோனியா, கருணாநிதி, மலையாள மேனன்கள் தான். இதில் தமிழர் என்றபோதிலும் வெக்கம் கெட்ட சுயமரியாதை இல்லாத ஜென்மம், தன் இனத்தையே அற்ப காசுகளுக்காக காவு கொடுத்த சிந்தாமணி கருணாநிதி தான்....
Rate this:
Share this comment
Cancel
anandhaprasadh - Bangalore,இந்தியா
07-பிப்-201306:32:42 IST Report Abuse
anandhaprasadh தலைவா... இனிமே மத்திய அரசை நம்பிப் பிரயோஜனம் இல்லை.. நம்மகிட்டதான் அட்டாக் பாண்டி முதலான சிறந்த வீரர்களும், வழி நடத்தத் "தளபதி"யும், துணைக்கு "அஞ்சா நெஞ்சனும்" இருக்கிறார்களே... பேசாம ராஜபக்ஷேவை "பொட்டு" மாதிரி போட்டுட்டு வரச் சொல்லுங்களேன்...
Rate this:
Share this comment
jagan - Chennai,இந்தியா
07-பிப்-201307:18:42 IST Report Abuse
jaganதி மு கழகம் குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் 'வீரர்கள்'...... இதுங்க அங்க போய் எதாவது செய்ய பாத்து அவன் போட்டுடன்னா... அதுக்கு வேற மஞ்சள் துண்டு அழும்.........
Rate this:
Share this comment
08-ஏப்-201306:54:32 IST Report Abuse
சொல்லுங்கண்ணே சொல்லுங்கஅது எப்படி அவ்வளவு சீக்கிரத்தில் போட முடியும். நாங்க ஈழ தமிஷர் பிரச்சனையை வைத்து அரசியல் பண்ணலாமுன்னு இருக்கோம். இப்படி மஞ்சா துண்டு நினைக்கிறார். அவரை கண்ணா பின்னாவென்று மனதை கலைத்து விடாதீர்கள்....
Rate this:
Share this comment
Cancel
Ponthangam - Singapore,சிங்கப்பூர்
07-பிப்-201306:16:35 IST Report Abuse
Ponthangam இரண்டு லட்சம் பேர் சாகும் போது மானாட மயிலாட பார்த்து ரசித்து விட்டு இப்போது நரி ஓலம் இடுகிறது ஐயோ அய்யய்யோ என்று. நன்றாக நகைச்சுவை பண்ணுகிறார்
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
07-பிப்-201307:32:59 IST Report Abuse
Pannadai Pandianஇரண்டு லட்சம் பேர் சாக வழி வகுத்தவர். மரண திட்டத்துக்கு ஸ்கெட்ச் போட்டு தந்தவர்....
Rate this:
Share this comment
Cancel
07-பிப்-201306:13:56 IST Report Abuse
சிந்திக்கும் வடிவேலு இப்போ ராஜபக்ஷே இந்திய எல்லைக்குள் வரணும வேண்டாமா ? சும்மா சுத்தி சுத்தி பேசாம சொல்லுங்க
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
07-பிப்-201306:03:45 IST Report Abuse
villupuram jeevithan சாத்தான் வேதம் ஓதினாலும் அது வேதம் தானே, மதிப்பு குறைய வாய்ப்பில்லையா?
Rate this:
Share this comment
Cancel
Panchu Mani - Chennai,இந்தியா
07-பிப்-201305:54:10 IST Report Abuse
Panchu Mani இவர் வாழும் புத்தர் என்று சொன்னாலும் மிகை ஆகாது.
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
07-பிப்-201307:34:51 IST Report Abuse
Pannadai Pandianஅதைத்தான் கல்லூரி ஆராய்ச்சி பிரிவிலும், சமச்சீர் கல்வியிலும் மற்றும் வரலாற்றிலும் புகுத்த நினைத்தார். மக்கள் விழித்துக்கொண்டனர்....
Rate this:
Share this comment
Cancel
Guru - Batam,இந்தோனேசியா
07-பிப்-201305:35:34 IST Report Abuse
Guru தமிழர்கள் மிது உங்களுக்களுக்கு உள்ள பற்றை உங்களின் உண்ணாவிரதம் ( இலங்கை போரின்போது ) மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது தலிவா
Rate this:
Share this comment
Cancel
sakthi - jurong ,சிங்கப்பூர்
07-பிப்-201305:17:11 IST Report Abuse
sakthi அல்லக்கை மரியா நீ சொல்வது சரிதான் தேர்தல் வருதுல்ல. உங்க கருத்து உண்மையே. தமிழனும் ஹிந்துவும் தான் உங்க தலைவருக்கு கேனயனுங்க. நடத்துங்கடா. ஒரு நாள் இல்ல ஒரு நாள் தமிழனும் ஹிந்துவும் சேர்ந்து வைப்பானுங்கட ஆப்பு உங்களுக்கு.
Rate this:
Share this comment
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
07-பிப்-201303:23:26 IST Report Abuse
s.maria alphonse pandian எழுப்பப்படவேண்டிய கருத்தை...எழுப்ப வேண்டிய நேரத்தில் எழுப்பியுள்ளார் கலைஞர்...மத்திய அரசு விழிக்குமா?
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
07-பிப்-201303:45:23 IST Report Abuse
தமிழ்வேல் அப்போ இந்த தடவை அம்மாவும் இது பற்றி நம்ம சொம்புகளுக்காவது கொஞ்சம் வாயை திறப்பார்.......
Rate this:
Share this comment
sam - dindigul,இந்தியா
07-பிப்-201303:55:59 IST Report Abuse
samஇருந்த போது எதுவும் செய்யவில்லை. பதவி போனபின் பொழுதுபோக்கு அறிக்கை. திரு அல்போன்சே அவர்களே மஞ்சள் துண்டு தள்ளுவண்டி இதுவரை எழுபியது என்னவென்று கூகுல்லில் ''karunanithi properties '' என்று தட்டி எழுப்பி பாருங்கள். நீங்கள் எலும்பிவிடுவீர்கள்.தலாய் லாமா ஒரு புத்த துறவி குஞ்சு ''அவர்களே தயவு செய்து இந்த சாக்கடையை சந்தனத்துடன் ஒப்பிடாதீர்கள்...
Rate this:
Share this comment
jagan - Chennai,இந்தியா
07-பிப்-201305:54:23 IST Report Abuse
jaganஆமாம்... ஆமாம்.. கண்டனம் மட்டும் உண்டு. ஏன் என்றால் இலங்கை தமிழனிடம் காசு இல்லை/காசு பார்க்க முடியாது......இப்போ.. நீரா ராடியாவோட தான் டீலிங்........
Rate this:
Share this comment
villupuram jeevithan - villupuram,இந்தியா
07-பிப்-201306:06:02 IST Report Abuse
villupuram jeevithanசெய்யவேண்டிய நேரத்தில், செய்யக் கூடிய பலம் அப்போது இருந்த நேரத்தில், செய்யாது இருந்தது தான் அவர் மீதுள்ள குற்றச்சாட்டு. தம் மக்கள் நலன் கண்ணை மறைத்துவிட்டது....
Rate this:
Share this comment
Ponthangam - Singapore,சிங்கப்பூர்
07-பிப்-201306:20:15 IST Report Abuse
Ponthangamஒருவன் வாழ்நாளில் யாருமே யோசிக்க கூட முடியாத அனைத்து பாவங்களையும் செய்துவிட்டு சாகும் நேரத்தில் சங்கரா சங்கரா என்றானாம்...
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
07-பிப்-201307:38:04 IST Report Abuse
Pannadai Pandianசாகும் தருவாயில் குழியில் தள்ளிவிட்டு தற்போது பிணத்தை தோண்டி எடுத்து சுண்ணாம்பு தடவுகிறார். அதுவும் 2014 க்காக....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை