போலீஸ் துறையில் சீர்திருத்தம்: சி.வி.சி., வலியுறுத்தல்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி:"" போலீஸ் துறை, சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் அமைப்பாக இருக்க வேண்டுமே தவிர, அரசின் ஏஜென்ட்டாக செயல்படக் கூடாது. போலீஸ் துறையில் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டியது, அவசியம்,'' என, லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணையர், ஸ்ரீகுமார் கூறினார்.


மத்திய லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணையர்களில் (சி.வி.சி.,), ஒருவரான, ஸ்ரீகுமார் கூறியதாவது:சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய, மிக முக்கியமான கடமை, போலீஸ் துறைக்கு உள்ளது. நம் நாட்டில் அமலில் உள்ள, போலீஸ் சட்டம், 1861ல், உருவாக்கப்பட்டது. இது தான், நம் நாட்டு போலீஸ் துறையின், முதுகெலும்பாக இன்னும் உள்ளது.போலீஸ் துறை, சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் அமைப்பாக இருக்க வேண்டுமே தவிர, அரசின் ஏஜென்டாக செயல்படக் கூடாது. தேசிய போலீஸ் கமிஷனால், 30 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட, மாதிரி போலீஸ் சட்டத்தை நடைமுறைப்படுத்த, பல மாநிலங்கள் தவறி விட்டன.போலீஸ் துறையில், சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். வழக்குகளில், விரைவான நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்கான கொள்கைகளில், உடனடியாக மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு, ஸ்ரீகுமார் கூறினார்.


AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (10)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P. Kannan - Bodinayakkanur,இந்தியா
07-பிப்-201313:08:25 IST Report Abuse
P. Kannan வெளி நாட்டில் இருந்து வந்து இங்கு வேலை செய்கிறாரோ. வித்தியாசமான மனிதர்.
Rate this:
Share this comment
Cancel
Iniya Tamilan - Bangalore,இந்தியா
07-பிப்-201311:36:50 IST Report Abuse
Iniya Tamilan சரியான கருத்து. இதை செயல்படுத்தும் அரசு கண்டிப்பாக நாட்டு பற்றுமிக்கது என்பதாகும்.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
07-பிப்-201309:29:24 IST Report Abuse
Pugazh V இன்றைய Time of India பத்திரிகையில் ஒரு போட்டோவும் செய்தியும் என்னவென்றால், ஒரு பைக்கில் 2 போலீசார் ஒன் வே யில் எதிராகப் போகிறார்கள். இதில் அல்ல விஷயம், அந்த பைக் மைலாப்பூரை சேர்ந்த ஒருவர் 7 மாதம் முன்னாள் காணவில்லை என்று புகார் கொடுத்திருந்தவருடையது. சென்ற மாதம் போலீசார், //கண்டுபிடிக்க முடியவில்லை// என்று புகார் செய்தவருக்கு சான்றிதழ் வழங்கியும் விட்டார்கள். அப்புறம் அந்த பைக்கை சொந்த உபயோகத்திற்கு வைத்திருக்கிறார்கள். அன்று மட்டும் ஒன் வே யில் எதிராகப் போகாமல் இருந்திருந்தால் இதைக் கண்டுபிடித்திருக்கவே இயலாது. இது தாண்டா போலீஸ்.
Rate this:
Share this comment
Cancel
Raj - Chennai,இந்தியா
07-பிப்-201308:45:37 IST Report Abuse
Raj இப்படி கருத்து therivichathukku கூடிய சீக்கிரம் ரொம்ப வருத்தபட போரிங்க
Rate this:
Share this comment
Cancel
Raju Rangaraj - Erode,இந்தியா
07-பிப்-201308:42:47 IST Report Abuse
Raju Rangaraj அதிகாரி என்றால் கருத்து சொல்லலாம். அதோடு சரி. வேறொன்றும் நடக்காது. தனக்குரிய தனக்கு ஏவல் புரியும் எவரையும் சட்டமோ அரசோ மாறாமல் பார்த்து கொள்ளும் வலிமை வாய்ந்த தேசம் இது. உங்களைபோல் தனியாக இயங்கும் வல்லமை பெற்றிருந்தால் ஒரு வேளை பிரான்சில் இருப்பது போல் தனியாக இயங்கும் சட்டம் என்றால் போலீஸ் நன்றாக இருக்கலாம். இங்கே அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அரசியல் வாதிகளுக்கு சலாம் போடுவது தவிர்க்க முடியாததாகி விட்டதோ ?
Rate this:
Share this comment
Cancel
lajusan - Singapore  ( Posted via: Dinamalar Android App )
07-பிப்-201307:50:55 IST Report Abuse
lajusan really i welcome your opinion congrats to u
Rate this:
Share this comment
Cancel
samuelmuthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
07-பிப்-201307:35:25 IST Report Abuse
samuelmuthiahraj ஊதவேண்டியத்தை ஊதவேண்டிய நேரத்தில் ஊதிவிட்டார். ஆனால் அவரை பதவியிலிருந்து ஊதிவிடக்கூடாது. எனினும் ஜால்ராக்கள் மத்தியில் இவர் போன்ற தைரியமும் துணிச்சலும் கொண்ட அதிகாரிகள் பாராட்டுதலுக்கு உரியவர்கள். அவர்கள் சந்ததி தழைத்தோங்கும் ஆண்டவன் அருளால்
Rate this:
Share this comment
Cancel
Guru - Batam,இந்தோனேசியா
07-பிப்-201305:27:57 IST Report Abuse
Guru உண்மை.., நிச்சயம் சீர்திருத்தவேண்டிய துறை .
Rate this:
Share this comment
Cancel
naagai jagathratchagan - mayiladuthurai ,இந்தியா
07-பிப்-201304:23:36 IST Report Abuse
naagai jagathratchagan சபாஷ் ...அரசியல் நுழையாத துறை எது ....சொல்லுவது சட்டம் ...செல்லுமா இந்த திட்டம் ...வேலி பாத்து காக்கவே ..அதுவே மேயத்தான் கூடாது ...
Rate this:
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
07-பிப்-201303:56:00 IST Report Abuse
Baskaran Kasimani ஊழல் செய்பவர்களுக்கு தண்டனை வாங்கிக்கொடுக்க CVC யால் முடிவதில்லை. அந்த ஆதங்கத்தில்த்தான் சொல்கிறார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்