கோவை : "மத
ரீதியான மோதல்கள் உள்ள மாவட்டங்களில், பதட்டம் ஏற்படாமல் தடுக்க
சிறுபான்மை ஆணையம் சார்பில், உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என,
ஆணையத் தலைவர் பேராயர் பிரகாஷ் தெரிவித்தார்.
கோவை கலெக்டர்
அலுவலகத்தில் நேற்று மாநில சிறுபான்மையினர் ஆணையக்குழு தலைவர் பேராயர்
பிரகாஷ் தலைமையில், சிறுபான்மை இன பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
பின், பேராயர் பிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது:
கோவை, திருப்பூர்,
கன்னியாகுமரி, கரூர் மாவட்டங்கள் மத ரீதியான பதட்டமுள்ள பகுதிகளாக உள்ளன.
இதில், கோவை, கன்னியாகுமரி அதிக "சென்சிடிவ்' மாவட்டங்களாக உள்ளன.
மதரீதியான மோதல்கள் உள்ள மாவட்டங்களில் பதட்டம் ஏற்படாமல் தடுக்க,
சிறுபான்மை ஆணையம் தேவையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
ஜெருசலம்
புனித யாத்திரை செல்ல, நபர் ஒருவருக்கு ரூ. 20 ஆயிரம் வீதம் தமிழக அரசு
உதவித்தொகை வழங்கி வருகிறது. இது போன்ற சலுகைகள், வேறு எந்த மாநிலத்திலும்
இல்லை.
சிறுபான்மையினர் நலத்துறை மூலம், 2008 முதல் 2012ம் ஆண்டு வரை,
ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 668 கிறிஸ்துவர்; ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 706
முஸ்லிம் மாணவர்களுக்கு ரூ. 47 கோடி 33 லட்சம் கல்வி உதவித்தொகை
வழங்கப்பட்டுள்ளது. ஆறாம் வகுப்பு முதல் 10வது வகுப்பு வரை படிக்கும்
மாணவர்களுக்கு இந்த கல்வி உதவித்தொகை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பிளஸ்
2, டிப்ளமோ,பட்டப்படிப்பு மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகைகள்
வழங்கப்பட்டுள்ளன.
சிறுபான்மை மக்களுக்கு சொந்தமான நிலங்கள்
ஆக்ரமிக்கப்பட்டிருந்தாலோ, மோசடி செய்து விற்கப்பட்டிருந்தாலோ அவற்றை மீட்க
நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, பேராயர் பிரகாஷ் தெரிவித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.