சென்னை : உணவுத்
தொழில் வணிகர்களிடம் வசூல் நடத்தும் அதிகாரிகள் மீது, தமிழக முதல்வர்
நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வணிகர் சங்க பேரமைப்பு தெரிவித்துள்ளது.
உணவு
பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டத்தின் கீழ், உணவுத் தொழில் நடத்துவோர் உரிமம்
பெற, பிப்.4ம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. வணிகர்களின்
கோரிக்கையை ஏற்று, பதிவு மற்றும் உரிமம் பெற, ஓராண்டு கால அவகாசம்
அளிப்பதாக, மத்திய அரசு நேற்று அறிவித்தது. இதை வணிகர்கள் வரவேற்றுள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிக்கை:
"எந்த
மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில், 540 உணவு பாதுகாப்பு
அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். ஒரு வாரத்தில் வியாபாரிகளை மிரட்டி, உரிமம்,
பதிவு பெற வைத்து, உரிமத்துக்கு, 2,000 ரூபாய் வரை லஞ்சம் பெற்றுள்ளர்.
லஞ்ச வேட்டை குறித்து விசாரித்து, அதிகாரிகள் மீது, முதல்வர் நடவடிக்கை
எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.