pothu news | ரூ.1.12 கோடியில் அகழி அமைக்க முடிவு : தண்டவாளத்தை யானைகள் கடப்பதை தடுக்க நடவடிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.1.12 கோடியில் அகழி அமைக்க முடிவு : தண்டவாளத்தை யானைகள் கடப்பதை தடுக்க நடவடிக்கை

Added : பிப் 07, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

ஓசூர்: ஓசூர் அருகே, ரயில் மோதி இரு யானைகள் பலியான இடத்தையொட்டிய மலைக்கிராமங்களில், 50 கி.மீ., தூரம், ஒரு கோடியே, 12 லட்சம் ரூபாயில், யானைகள் தாண்டா அகழி அமைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். யானைகள் தண்டாவாளத்தை கடக்காத வகையில், 15 கி.மீ., தூரம், 24 மணி நேர யானைகள் கண்காணிப்பு முகாம் துவங்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த குரும்பட்டியில் நேற்று முன்தினம் தண்டவாளத்தை கடக்க முயன்ற இரண்டு யானைகள், ரயில் மோதி பலியாகின. இந்த இடத்தில், 2003ம் ஆண்டு ஐந்து யானைகள் ரயில்மோதி பலியாகின. சேலம் - பெங்களூரு வழித்தடத்தில், 111 கி.மீ., தொலைவில் இருந்து, 126 கி.மீ.,வரை யானைகள் நடமாட்டம் மிகுந்த ஊடேதுர்க்கம் வனப்பகுதி உள்ளது. ரயில் தண்டவாளத்தில், 15 கி.மீ., தூரம் ரயில்கள், 30 கி.மீ., வேகத்தில் செல்ல பெங்களூரு கோட்ட ரயில்வேதுறை, ரயில் இன்ஜின் டிரைவர்களுக்கு உத்தரவிட்டிருந்தது. நேற்று முன்தினம் ரயில் இன்ஜின் டிரைவர், 40 கி.மீ., வேகத்தில் கட்டுப்பாடில்லாமல் வந்ததால், ரயில்மோதி, யானைகள் இறந்ததாக மாவட்ட வன அலுவலர் உலகநாதன், ரயில் இன்ஜின் டிரைவர் மீது பெங்களூரு ரயில்வே கோட்ட மேலாளர் அகர்வாலிடம் புகார் செய்தார். யானைகள் பலியான இடத்தில் ஊடேதுர்க்கம் காப்பு காட்டில் இருந்து யானைகள் நிரந்தரமாக வெளியேறி ரயில்வே தண்டாவாளத்தை கடக்காமல் தடுக்க, 50 கி.மீ., தூரம் ஒரு கோடியே, 12 லட்சம் ரூபாய் மதிப்பில் யானைகள் தாண்டா அகழி அமைக்க வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தற்காலிக நடவடிக்கையாக குரும்பட்டி மலைக்கிராமத்தில், 15 கி.மீ., தூரம் யானைகள் ரயில்வே தண்டாவாளத்தை கடக்காமல் தடுக்க, 24 மணி நேர யானைகள் கண்காணிப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
முகாமில், ராயக்கோட்டை வனச்சரகர் வினோபாஜி மேற்பார்வையில் ஒரு பாரஸ்டர், இரு கார்டு வாச்சர்கள், இரு ஆண்டி போச்சிங் வாச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவினர், 24 மணி நேரமும் ஷிஃப்ட் முறையில் ரோந்து பணியில் ஈடுப்பட்டு பட்டாசு, டார்ச் லைட்டுகள் உதவியுடன் யானைகள் ஊடேதுர்க்கம் காட்டில் இருந்து வெளியேறினால் அவற்றை மீண்டும் காட்டிற்குள் திருப்பி விரட்டுவர். யானைகள் கண்காணிப்பு முகாமில் தங்கி அங்கேயே சமைத்து சாப்பிட மாவட்ட வன அலுவலர் உலகநாதன் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
தளி, தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி வனச்சரக பகுதியில் கடந்த காலத்தில் யானைகள் அடிக்கடி காடுகளை விட்டு வெளியேறின. தற்போது, அங்கு யானைகள் தாண்டா அகழிகள் முழுமையாக அமைக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியில் யானைகள் காடுகளை விட்டு வெளியேறுவது நிரந்தரமாக தடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஊடேதுர்க்கம் பகுதியிலும் யானை தாண்டா அகழி அமைக்கும் பணி உடனடியாக துவங்கி வரும் மார்ச்சில் முடிக்கப்படும். ஊடேதுர்க்கம் காட்டில் யானை தாண்டா அகழி அமைக்கும் வரை, அந்த வனப்பகுதியில் யானைகளுக்கு தேவையான தண்ணீர், தீனி ஆகியவற்றை வனத்துறை மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை