திண்டுக்கல் : உணவு
பாதுகாப்பு தர சட்டத்தின் கீழ் வணிகர்கள் பதிவு சான்றிதழ் மற்றும் உரிமம்
பெறுவதற்கான காலக்கெடுவினை மத்திய அரசு ஓராண்டிற்கு நீடித்துள்ளது.
மத்திய
அரசு அமல்படுத்தியுள்ள உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தில்
அனைத்து வணிகர்களும் பதிவு சான்றிதழ் மற்றும் உரிமம் பெறுவதற்கான காலக்கெடு
2013 பிப்., 4 என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த சட்டத்தின் படி உணவு
பொருட்கள் விற்பனை செய்பவர்கள் உறுப்பினர்களாக தங்களை பதிவு செய்து கொண்டு,
உரிமம் பெற வேண்டும்.
பதிவு செய்யாதவர்கள் மற்றும் உரிமம் பெறாதவர்கள்
உணவு தொடர்பான தொழிலை விட்டு வெளியேற வேண்டும். உரிமம் பெற்றவர்கள் தர
நிர்ணய சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள 70 விதிமுறைகளை கடைபிடிக்க
வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
காலக்கெடுவினை நீடிக்க
வேண்டுமென்று மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டது. அதன்படி உணவு பாதுகாப்பு
தர நிர்ணய சட்டத்தின்படி உரிமம் பெறுவதற்கான காலக்கெடுவினை, மத்திய அரசு
ஓராண்டிற்கு நீடித்துள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.