ராமநாதபுரம் : பெருகி
வரும் மக்கள் தொகையால், 2050ம் ஆண்டில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும்
அபாயம் உள்ளது, என தேசிய நீர் ஆதார வளர்ச்சி மற்றும் வேளாண் தொடர்பு
நிபுணர்கள் குழு எச்சரித்துள்ளது. இதை தொடர்ந்து, தமிழகத்தில் விவசாயம்
சார்ந்த அனைத்து துறைகளும் இணைந்து, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த,
மாவட்டம் வாரியாக ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர். விவசாய நாடான
இந்தியாவின் பொருளாதாரம், வேளாண் உற்பத்தியை அதிகம் சார்ந்துள்ளது. பெருகி
வரும் மக்கள் தொகையால், 2001ல் தனி நபர் சராசரியில் 1,820 கனமீட்டர் என்ற
அளவில் கிடைத்த நீர், 2025ல் 1,340 கனமீட்டராக குறையும் என,
எதிர்பார்க்கப்படுகிறது. இது 2050ம் ஆண்டில் கிடைக்க கூடிய நீர்,
சேமிக்க முடியாமல், தேவைகளை பூர்த்தி செய்ய மட்டுமே இருக்கும் நிலையில்,
தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. பருவமழை பொய்த்து வரும் காரணத்தாலும்,
நீர் பிடிப்பு மற்றும் நீர்நிலைகளில் செய்யப்படும் ஆக்கிரமிப்புகளாலும்,
பாசன அமைப்புகளுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. தேசிய அளவில் பாசன திறனை 10
சதவீதம் அதிகரிப்பதன் மூலம் மட்டுமே, 166 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில்,
நெல் சாகுபடி செய்யமுடியும். பாசன நிலங்களில், நீரை சேமித்து நவீன வேளாண்
உத்திகளை கையாண்டு, சிக்கனமாக நீரை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக
தமிழக அரசு, பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பு, வேளாண் பொறியியல்
துறை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை துறை, வேளாண் பல்கலை, கால்நடைத்துறை,
மீன்வளத்துறைகள் இணைந்து மாவட்டம் வாரியாக விவசாயிகளை சந்தித்து ஆலோசனை
வழங்கி வருகின்றனர். தண்ணீர் சிக்கன ஆலோசனை: அருகருகே கிணறு
அமைக்கக்கூடாது. கடின பாறை பகுதிகளில் திறந்தவெளி கிணறு அமைக்கும்போது,
நீளம் அதிகமாகவும், அகலம் குறைவாகவும் இருக்க வேண்டும். மின் இறைப்பு
சாதனம் தேவையான குதிரைத்திறனுக்கு மேல் பொருத்தக்கூடாது. சொட்டுநீர்
மற்றும் தெளிப்பு நீர் பாசன முறையை, நிலநீர் வளம் குறைந்த பகுதியில்
பயன்படுத்த வேண்டும். வீடு மற்றும் தொழிற்கூடங்களில், மழைநீர் சேமிப்பு
திட்டத்தின் மூலம் கிணற்றின் நீர்மட்டத்தை அதிகரிக்க வேண்டும்.
கடற்கரையிலிருந்து 10 கி.மீ., வரை நிலத்தடிநீர் இறைப்பு அதிகமானால்
கடல்நீர், நிலத்தடி நீரில் ஊடுருவி, விளைநிலங்களை பாதிக்கும். தண்ணீரின்
தரத்தையும் கெடுக்கும். இந்தியாவில் ஒரு நாளைக்கு 26 ஆயிரத்து 254
மில்லியன் லிட்டர் கழிவுநீரானது முதல் மற்றும் இரண்டாம் தர நகரங்களில்
வெளியேற்றப்படுகிறது. இதில் 27 சதவீதம் மட்டுமே சுத்திகரிப்பு
செய்யப்படுகிறது. மீதமுள்ள கழிவுநீர் ஏரி, குளங்கள், ஆறுகள்,
வாய்க்கால்களில் விடப்பட்டு மாசடைய செய்வதோடு, நிலத்தடி நீரையும்
பாதிக்கிறது. எனவே கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து விவசாயத்திற்கோ,
தொழிற்சாலை பயன்பாட்டிற்கோ, மீன் வளர்ப்பிற்கோ பயன்படுத்த வேண்டும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.