சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் அருகே வயது முதிர்வுடன், கடந்த கார்த்திகை மாதம் இறந்த
கருடனனில் உடலை, மூன்று மாதம் பானையில் வைத்து பாதுகாத்து வந்து, பவானி
நதிக்கரையில் நேற்று ஐதீகப்படி தகனம் செய்தனர்.
ஈரோடு மாவட்டம்,
சத்தியமங்கலம் அருகே உள்ளது அரியப்பம்பாளையம். இங்குள்ள மேற்கு தோட்டத்தை
சேர்ந்தவர் ஆறுமுகம், 60. இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில், இதே பகுதியை
சேர்ந்த பழனிக்கவுண்டர், 58, கரும்பு பயிரிட்டு விவசாயம் செய்கிறார்.
கடந்த கார்த்திகை மாதம், 10 தேதி கரும்பு காட்டுக்கு, பழனிக்கவுண்டர்
தண்ணீர் பாய்ச்சியபோது, வயதான நிலையில் ஒரு கருடன் இறந்து கிடந்தது.
இதுபற்றி,
தன் சகோதரர் செல்லிகவுண்டர், 61, மற்றும் நிலத்தின் உரிமையாளர் ஆறுமுகம்,
ஊர்க்கவுண்டர் பழனிச்சாமி, 45, ஆகியோருக்கு தகவல் கொடுத்தார். அப்பகுதி
பெருமாள் பக்தர் சின்னச்சாமி தாசனிடம் கூறியபோது, "இறந்த கருடன் உடலை,
புதுப்பானை வாங்கி, அதில் வைத்து, மூன்று மாதம் பாதுகாக்க வேண்டும்.
அதன்பின் முறைப்படி பவானி நதிக்கரையில் தகனம் செய்ய வேண்டும்' என்றார்.
இதன்படி
தோட்டத்தின் உரிமையாளர் ஆறுமுகம், தன் தோட்டத்தில் உள்ள வேப்ப மரத்தில்,
புதுப்பானையில் இறந்த கருடன் உடலை, மூன்று மாதமாக பாதுகாத்தார். நேற்று
இந்த கருடனின் உடலை தகனம் செய்ய நாள் குறிக்கப்பட்டது. நேற்று அலங்காரம்
செய்யப்பட்ட கருடனில் உடலை, ஊர்வலமாக பவானி நதிக்கரைக்கு கொண்டு வந்தனர்.
அங்கு
விறகுகள் அடுக்கி அதன்மேல் கருடனில் உடலை வைத்து, சின்னச்சாமி தாசன் தீ
மூட்டினார். அதற்கு முன் ஐதீகப்படி சடங்குகள் அனைத்தும் நடந்தது. கருடனில்
உடலை தகனம் செய்த பின், பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து,
சாம்பலில் ஊற்றி கருடனில் எலும்புகளை எடுத்து ஆற்றில் விட்டனர்.
பின்,
சின்னச்சாமி தாசன் மொட்டை அடித்து, இறந்த கருடனுக்கு அஞ்சலி செலுத்தினார்.
பவானி ஆற்றங்கரையில் பெருமாள் சிலை வைத்து, அதற்கு மாலை அணிவித்து,
படையலிட்டு சிறப்பு பூஜை செய்தனர்.""இறந்த கருடனை ஐதீகப்படி தகனம் செய்தால், மழை வரும் என்பது ஐதீகம்,'' என, சின்னச்சாமி தாசன் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.