நகரி:தன்னை ஐந்து பேர் கொண்ட கும்பல், கடத்தி சென்று துன்புறுத்தினார்கள் என்று புகார் கொடுக்க வந்த, 14 வயது சிறுமியை, போலீஸ்காரர் பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக, போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், எஸ்.ஆர்.புரம் அடுத்த புல்லூர் மிட்ட தலித் காலனியில் வசிக்கும் சம்பத் என்பவரின் மூத்த மகள் அனிதா, 14, (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரை, ஐந்து பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்று துன்புறுத்தியது.இச்சம்பவம் குறித்து, ஸ்ரீ ரங்கராஜபுரம் போலீஸ் நிலையத்தில், அனிதாவின் சித்தி அம்சம்மாள் புகார் கொடுத்தார். இப்புகாரின் மீது விசாரøணை செய்வற்காக, இம்மாதம், 1ம் தேதி இரவு, சிறுமியையும், அவரது சித்தியையும் எஸ்.ஐ., ரவி நாயக் போலீஸ் நிலையத்திற்கு அழைத்தார். சிறுமியை லாக்-அப்பில் அடைத்த எஸ்.ஐ., இவர்களுக்கு பாதுகாப்பாக, மூன்று போலீசாரை காவல் இருக்கும்படி கூறி விட்டு, வீட்டுக்கு சென்று விட்டார்.அப்போது போலீஸ் நிலையத்தில் குடிபோதையில் இருந்த போலீஸ்காரர் கோபி, லாக்-அப் அறைக்குள் சென்று அங்கிருந்த சிறுமியை பலாத்காரம் செய்தார். இந்த கொடூர சம்பவத்தை கண்ட சிறுமியின் சித்தி கூச்சலிட்டார். அதையும் போலீஸ்காரர் கோபி பொருட்படுத்தாமல் மேலும் சிறுமியை துன்புறுத்தியுள்ளார்.இச்சம்பவம் குறித்து, சிறுமி அனிதாவும், அவரது சித்தி அம்சம்மாள் இருவரும் சித்தூரில் எஸ்.பி.,யிடம் புகார் செய்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக, மாவட்டத்தை சேர்ந்த பல தலித் சங்கத்தினரும், இந்த சம்பவம் மீது விசாரணை நடத்த வேண்டும்; போலீஸ்காரர் கோபி மீது, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.இதையடுத்து, சிறுமியை பலாத்காரம் செய்த போலீஸ்காரர் கோபியை, போலீசார் கைது செய்து, வழக்கு பதிந்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.